இறந்து போன என்னுடைய பாட்டி…. “பரதேசி” படத்துல அப்படியே நடந்துச்சு… நடிகை தன்ஷிகா ஓபனாக சொன்ன விஷயம்…!!

By Soundarya on அக்டோபர் 30, 2024

Spread the love

தமிழில் தற்போது பல திரைப்படங்களிலும் வலிமையான கதாபாத்திரங்களை எடுத்து நடித்து வருபவர் தான் நடிகை சாய் தன்ஷிகா. தமிழ் பெண்ணான இவர் ஜெயம் ரவி நடித்த பேராண்மை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அரவான் மற்றும் பரதேசி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

#image_title

இந்த திரைப்படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அதன் பிறகு பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஸ்டாரின் கபாலி திரைப்படத்திலும் ரஜினியின் மகளாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

   
   

#image_title

 

பிறகு மாஞ்சா வேலு மற்றும் விழித்தெரு உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சி காட்டி போட்டோஷூட் நடத்தி வருகிறார். தற்போது ஐந்தாம் வேதம் படத்தில் நடித்து வருகிறார்.

#image_title

இந்த படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர், பரதேசி பண்ணும்போது அந்த கேரக்டர் என்னுடைய பாட்டியை மனதில் வைத்து தான் நடிச்சேன். அந்த படத்துல நான் இறந்திடுவேன். என் பாட்டி இறந்ததை அப்படியே மனத்தில் வைத்து படத்திலும் நடித்தேன் என்று கூறியுள்ளார்.

author avatar
Soundarya