CINEMA
MGR மறைவிற்கு வராத நம்பியார்… கட்டுக்கதை கட்டிய ரசிகர்கள்…
MGR தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற நடிகரும் தமிழ்நாட்டில் முதலமைச்சராக பதவி வகித்தவரும் ஆவார். 1977 வது ஆண்டு முதல் தான் இறக்கும் வரை தமிழ்நாட்டில் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர். 1936 ஆம் ஆண்டு சதிலீலாவதி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். எம்ஜிஆர் அண்ணாவின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து நடிக்கும் போதே அரசியல் பணிகளில் ஈடுபட்டவர் MGR.
தமிழக மக்களுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் MGR. சமூக நீதி கருத்துக்கள், ஆக்சன் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் எம்ஜிஆர். அவருக்கு இருந்தவர்கள் எல்லாம் ரசிகர்கள் என்று கூறவே முடியாது. அவர்கள் எல்லாரும் எம்ஜிஆர் பக்தர்கள் என்று கூறலாம்.
நம்பியார் தமிழ் திரை உலகில் பழம்பெரும் நடிகர் ஆவார். ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் சினிமாவில் பணியாற்றியவர். பெரும்பாலான எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர். நம்பியார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், எம்ஜிஆர் அவர்களுக்கு அடுத்ததாக போற்றப்பட்டவர் நம்பியார்.
சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் நம்பியார். படங்களில்தான் வில்லனாக நடித்தவர் நம்பியார். ஆனால் தன்னுடைய வாழ்க்கையில் சிறந்த ஆன்மீகவாதியாகவும் டீ டோட்டலராகவும் இருந்து வந்துள்ளார். தொடர்ந்து 65 ஆண்டுகளாக சபரிமலைக்கு தவறாமல் சென்று வந்தவர் நம்பியார்.
நம்பியார், எம்ஜிஆர் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பெரும்பாலான திரைப்படங்களில் வில்லனாக நடித்திருப்பார். 1987 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் தனது 70 வது வயதில் காலமானார். அப்போது எம்ஜிஆரின் மறைவுக்கு நம்பியார் வரவில்லை. அது குறித்து அவரது ரசிகர்கள் பல கட்டு கதையை கட்டியிருந்தனர். அந்த நேரத்தில் இது பெரிதாக பேசப்பட்டது. நம்பியாருக்கும் எம் ஜி ஆர் க்கும் பகை என்று கூறினர்.
ஆனால் உண்மையான காரணம் என்னவென்றால் எம்ஜிஆர் மறைவான போது நம்பியார் சபரிமலைக்கு மாலை போட்டு இருந்தாராம். அதன் காரணமாகவே அவர் எம்ஜிஆர் மறைவுக்கு வரவில்லை என்று அவரே ஒரு நேர்காணலில் கூறியிருப்பார். இதை அறியாமல் அவரது ரசிகர்கள் பல கட்டு கதையை கட்டி விட்டார்கள் என்றும் கூறியுள்ளார் நம்பியார்.