கர்நாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தை சேர்ந்தவர் மோகன். இவர் தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற நடிகர். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானவர். மோகன் தமிழ் சினிமாவில் 80க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் மோகன்.
மோகன் முதலில் நாடகத்தில் தான் நடித்துக் கொண்டிருந்தார். பின்னர் பாலு மகேந்திரா கன்னடத்தில் இயக்கிய கோகிலா என்ற திரைப்படத்தின் மூலம் கமலஹாசன் உடன் நடித்து திரையுலகில் அறிமுகமானார். பின்னர் 1980 இல் மூடுபனி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். 80களில் உச்சபட்ச நடிகராக இருந்த மோகனை வெள்ளிவிழா நாயகன் என்று செல்லமாக தமிழக மக்களால் அழைக்கப்பட்டார். இவர் நடித்த பெரும்பாலான தமிழ் திரைப்படங்கள் வெற்றி அடைந்தது.
மேடை பாடகராக இவர் நடித்த கதாபாத்திரங்கள் அனைத்தும் பட்டி தொட்டியெங்கும் பரவியது.பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் குரல் கச்சிதமாக மோகனின் முகபாவனைகளுக்கு பொருந்தும். அந்த நேரத்தில் இவர் மேடையில் படத்தில் பாடும் பாடல்களை மக்கள் மோகனே தான் பாடியிருக்கிறார் என்று நம்பினர். அந்த அளவுக்கு எஸ்பிபி அவர்களின் குரலுக்கு தனது நடிப்பின் மூலம் உயிர் கொடுத்து இருப்பார் மோகன்.

நெஞ்சத்தை கிள்ளாதே, பயணங்கள் முடிவதில்லை, ரெட்டைவால் குருவி, விதி, நூறாவது நாள் போன்ற திரைப்படங்களில் நடித்த மோகன் 1986 ஆம் ஆண்டு மௌனராகம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திருப்புமுனையை பெற்றார். இப்படம் இன்றளவும் எவர்கிரீன் ஹிட் படமாக உள்ளது. இப்படத்தில் பாடல்களும் மெகா ஹிட் ஆனது.
தொடர்ந்து கிளிஞ்சல்கள், தீராத விளையாட்டுப் பிள்ளை, கோபுரங்கள் சாய்வதில்லை, மனைவி சொல்லே மந்திரம், நெஞ்சத்தை அள்ளித்தா, நான் பாடும் பாடல், பணம் பத்தும் செய்யும், தெய்வப் பிறவி, உதயகீதம், மெல்ல திறந்தது கதவு, பாச மழை போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்தவர் மோகன். ஆனால் 2000களின் ஆரம்ப பகுதியில் விஜய், அஜித், பிரசாந்த் போன்றோர் தமிழ் சினிமாவில் நுழைந்ததால் இவரது மார்க்கெட் சரிந்தது. அதனால் சினிமாவில் இருந்து விலகி கொண்டார் மோகன்.
மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்த ஆண்டு மோகன் ஹரா என்ற திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியானது. சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட மோகன் தனது சினிமா பயணத்தை பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் அவர் அஞ்சலி படத்திற்கான வாய்ப்பு கிடைத்ததையும் அதை நிராகரித்ததற்கான காரணத்தையும் பகிர்ந்துள்ளார்.

மோகன் கூறியது என்னவென்றால், அஞ்சலி படத்தில் நடிப்பதற்கு முதலில் என்னை தான் அழைத்தார்கள். எனக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அதில் எனக்கு பிடிக்காதது எனக்கு உடன்பாடு இல்லாமல் போன ஒரே விஷயம் என்னவென்றால் மாற்றுத்திறனாளி குழந்தையை தனியறையில் படுக்க வைப்பது போன்ற காட்சிகளை வைத்திருந்தார்கள். அது எனக்கு பிடிக்கவில்லை அதனால் அந்த படத்தில் நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்து நிராகரித்து விட்டேன் என்று பகிர்ந்துள்ளார் மோகன்.
