பழம்பெறும் மூத்த நடிகை தேவிகா அவர்களின் மகள் தான் நடிகை கனகா. இவரது தந்தை தேவதாஸ் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகர் ஆவார். தமிழ் சினிமாவின் கிராமத்து நாயகியாக வலம் வந்தவர் கனகா. தனது வசீகரிக்கும் கண்கள் மற்றும் முக பாவனைகள் மூலம் ஏராளமான ரசிகர்களை கொண்டவர் கனகா.
1989 ஆம் ஆண்டு ராமராஜன் நடித்த கரகாட்டக்காரன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் கனகா தமிழ் சினிமாவில் அறிமுகமானார் கனகா. முதல் படமே மெகா ஹிட் ஆகி பட்டி தொட்டி எங்கும் பரவி புகழ்பெற்றார் கனகா. தனது முதல் படமே வெற்றி திரைப்படமாக கனகாவிற்கு அமைந்தது. அன்றைய காலகட்டத்தில் பிறந்த குழந்தைகளுக்கு கனகா என்று பெரும்பாலான மக்கள் பெயரிட்டனர். அந்த அளவுக்கு புகழின் உச்சிக்கு சென்றார் கனகா.
அடுத்ததாக ரஜினிகாந்த, பிரபு, கார்த்திக், மோகன்லால், மம்முட்டி, ஜெயராம் ஆகிய நடிகர்களுடன் தமிழ், மலையாளம் தெலுங்கு, என அனைத்து மொழிகளிலும் பிசியான நடிகையாக பிரபலமாக நடிகையாக வலம் வந்தார் கனகா.

எதிர்காற்று, அதிசய பிறவி, கும்பக்கரை தங்கையா, தாலாட்டு கேக்குதம்மா, கோவில் காளை, சக்கரை தேவன், சக்திவேல், பெரிய குடும்பம், சிம்ம ராசி, விரலுக்கேத்த வீக்கம் போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்தவர் கனகா. தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்த கனகா ஒரு காலகட்டத்திற்கு மேல் காணாமல் போனார்.
2007 இல் கலிபோர்னியாவை சேர்ந்த பொறியாளர் முத்துக்குமார் என்பவரை யாருக்கும் தெரியாமல் கனகா திருமணம் செய்து கொண்டதாகவும் திருமணம் முடிந்து 15 நாள் கழித்து அவர் காணாமல் போய்விட்டதாகவும் தற்போது வரை அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை என்று இடையில் ஒரு செய்தி வெளியானது.
ஆனால் சோசியல் மீடியா, சினிமா என எதிலுமே தொடர்பில்லாமல் கனகா காணாமலே போய்விட்டார். அவரை பல பிரபலங்கள் தேடியும் அவர் கிடைக்கவில்லை. தற்போது சமீப காலத்திற்கு முன்பு தான் கனகா தாமே ஒரு வீடியோ வெளியிட்டு இருப்பதை உறுதி செய்தார். இதைப்பற்றி குட்டி பத்மினி ஒரு நேர்காணலில் கனகாவை பற்றி கூறியிருந்தார்.

குட்டி பத்மினி கூறியது என்னவென்றால், கனகா வாழ்க்கைல ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க. அவங்க அம்மா இறந்ததுக்கு அப்புறமே அவங்க ரொம்ப உடைஞ்சுட்டாங்க. அவங்க நம்பினவங்க எல்லாமே அவங்களை ஏமாத்திட்டாங்க. அதனால அவங்க நான் யாரையுமே நம்ப விரும்பல வெளியுலகத்துக்கு வரவும் எனக்கு விருப்பமில்லை அப்படின்னு சொல்லிட்டாங்க. ஆனா அவங்க ரொம்ப நலமா சௌகரியமா தான் இருக்காங்க. எந்த பிரச்சினையும் இல்லை என்று குட்டி பத்மினி கூறி இருக்கிறார்.
