#image_title
ஷாம் தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான நடிகர் மற்றும் மாடல் ஆவார். இவர் தமிழ்நாட்டின் மதுரையில் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர். இவரது இயற்பெயர் சம்சுதீன் இப்ராஹிம் என்பதாகும். தனது கல்லூரி படிப்பை முடித்த பின்பு மாடலிங் செய்ய ஆரம்பித்தார் ஷாம். அதற்கு பிறகு சினிமாவில் நடிகராக வேண்டும் என்று லட்சியத்தை கொண்டிருந்தார்.
ஷாம் பெங்களூரில் மாடலாக தனது வாழ்க்கையை தொடங்கினார். பல்வேறு விளம்பரங்களுக்கு மாடலிங் செய்து இருக்கிறார். பல அலுவலகங்களுக்கு ஏறி இறங்கி நடிப்பிற்காக வாய்ப்பினை தேடியவர் ஷாம். 4 வருடங்களாக போராட்டத்திற்கு பின்பு காதலர் தினம் படத்தில் நடிப்பதற்காக ஆடிஷன் செய்தார். ஆனால் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அடுத்ததாக 12b படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பினை பெற்றார். அந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் ஷாம்.
அதற்குப் பிறகு 2002 ஆம் ஆண்டு சினேகாவுடன் இணைந்து ஏய் நீ ரொம்ப அழகா இருக்க என்ற படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பிரபலமானார் ஷாம். அடுத்ததாக அன்பே அன்பே, லேசா லேசா, இயற்கை, உள்ளம் கேட்குமே, மனதோடு மழைக்காலம் போன்ற திரைப்படங்களில் நாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் வளர்ந்து வந்தார் ஷாம்.
ஆனால் 2006க்கு பிறகு அவருக்கு சரியான நாயகனாக கதையம்சம் அமையவில்லை. அதற்கு பிறகு துணை கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார் ஷாம். தில்லாலங்கடி, வாரிசு போன்ற திரைப்படங்களில் துணை நடிகர் கதாபாத்திரத்தில் நடித்தார் ஷாம். சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட சாம் நடிகராக தான் வளரும்போது ஏன் வாய்ப்பில்லாமல் போனது என்பது பற்றி பகிர்ந்து இருக்கிறார்.
அவர் கூறியது என்னவென்றால், நான் ரொம்ப கஷ்டப்பட்டதுக்கு அப்புறம் தான் எனக்கு சினிமாவில வாய்ப்பு கிடைத்தது. 2000களின் ஆரம்பத்துல எனக்கு நல்ல வாய்ப்பு கிடைச்சு நான் அப்பதான் சினிமால வளர்ந்து வந்துட்டிருந்தேன். நான் வளர்ந்து வர நேரத்துல தான் விஷால், தனுஷ், ஜீவா, ஜெயம் ரவி போன்ற நடிகர்கள் சினிமா பின்புறத்தில் இருந்து உள்ள வந்தாங்க. அவங்க சினிமா பேகிரௌண்டில் இருந்து உள்ள வந்ததுனால எனக்கு சினிமா வாய்ப்பு கிடைக்காம போயிருச்சு என்று உருக்கமாக பேசியிருக்கிறார் ஷாம்.
அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளை, வெறும் 12 வயதே நிரம்பிய சிறுவன் ஒருவன் எவ்வித பயமும் இன்றி நைஸாகத்…
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் தேவருகொண்டா பகுதியில் உள்ள அஞ்சையா காலனியைச் சேர்ந்தவர் தாவூத் மியா (80). இவரது மனைவி…
தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம் ஜூலூருபாடு மண்டலம் வெங்கனாபாலையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிணி (18). கம்மமில் உள்ள தனியார்…
ஆந்திர மாநிலம் திருப்பதி கிராமப்புற காவல் எல்லைக்குட்பட்ட அவிலாலா பகுதி ஆந்திரா கிராமீணா வங்கியில் பெண் ஒருவர் தான் அடமானம்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஆசாம்கர் மாவட்டத்தில் உள்ள ஷம்பூபூர் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் சிங் என்பவர் நேற்று மாலை தனது…
பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பயிற்சி நிறுவனம் ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமியும், அவருடன் படிக்கும்…