Categories: சினிமா

எனக்கு அது செட் ஆகாது.. சிவகார்த்திகேயனுடன் நடிக்க மறுத்த லோகேஷ்.. வாரிசு நடிகருக்கு ரூட்டு போடும் படக்குழு..!!

Spread the love

பிரபல நடிகரான சிவகார்த்திகேயன் ராஜ் கமல் பிலிம்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் இந்தியா தயாரிப்பில் உருவான அமரன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடித்துள்ளார். மேஜர் முகுந்த் வரதராஜனை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் அக்டோபர் 31-ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

அடுத்ததாக ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் தனது 23-வது படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். இதற்கிடையே சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் புறநானூறு திரைப்படத்தில் இருந்து சூர்யா விலகிய பிறகு சிவகார்த்திகேயன் நடிக்க கமிட்டானார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ரீ லீலா நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தம்பி கதாபாத்திரத்தில் நடிக்க பட குழுவினர் லோகேஷ் கனகராஜிடம் கேட்டுள்ளனர். ஆனால் சிவகார்த்திகேயனுக்கு தம்பியாக நடித்தால் நன்றாக இருக்காது எனக்கூறி லோகேஷ் அதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் அது நெகட்டிவ் கதாபாத்திரமாக இருக்கும் என்பதால் அவர் விலகியதாக தெரிகிறது. இதனால் அந்த கேரக்டரில் நடிகர் அதர்வாவை நடிக்க வைக்கலாம் என பட குழுவினர் பேசி வருகின்றனர்.

ஆகாஷ் பாஸ்கரன் இயக்கும் ஒரு படத்தில் அதர்வா ஹீரோவாக நடிக்கிறார். அவர்தான் புறநானூறு படத்தின் தயாரிப்பாளர். இதனால் ஆகாஷ் பாஸ்கரனுக்காக அதர்வா அந்த படத்தில் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ஆம் தேதி அந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளது. அதில் நடிக்கப் போகும் நடிகர்கள் குறித்த கூடுதல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

admin

Recent Posts

“ஷாக்… தேசிய கீதத்தின் போது 15 வயது இந்திய வீரருக்கு நேர்ந்த விசித்திர சம்பவம்… பின்னணியில் இருக்கும் உண்மை என்ன…?”

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…

3 மணத்தியாலங்கள் ago

“‘திருமணம் பிடிக்கலனா விட்ருக்கலாம்… எதுக்கு என் மகன கொன்னீங்க…?’ – கொலை வழக்கில் மனம் உடைந்து.. கண்ணீருடன் தந்தை எழுப்பிய… நியாயமான கேள்வி…!!”

மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…

3 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு செக் வைக்க சீமானை களம் இறக்குகிறதா திமுக…? அம்பாசமுத்திரத்தில் அதிரடி திருப்புமுனை… பின்னணியில் மெகா கூட்டணி வியூகம்…!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…

3 மணத்தியாலங்கள் ago

ச்சீ… பெற்ற தந்தை என்றும் பாராமல்… நிலத்துக்காக நடுரோட்டில் கொடூரமாக இழுத்துச் சென்று தாக்கிய பிஎஸ்எஃப் வீரர்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…

3 மணத்தியாலங்கள் ago

மனிதநேயம் எங்கே போனது…? திருமண ஊர்வலத்தில் குதிரை மீது… நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…

3 மணத்தியாலங்கள் ago

த்ரிஷாவுக்கு திருமணத்தில் நம்பிக்கையே இல்லையா…? வைரலாகும் ‘தக் லைஃப்’ மேடை ரகசியம்…! த்ரிஷாவின் பழைய வீடியோ இப்போது திடீரென வைரலாவது ஏன்…?

திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…

4 மணத்தியாலங்கள் ago