ராகுல் காந்தி கைதான நிகழ்வுக்கு திமுக தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிக்கையோ அல்லது சமூக வலைத்தளப் பதிவுகளோ வெளியாகாதது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. காங்கிரஸ் கட்சி, தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைத்ததால் ஏற்பட்ட அதிருப்தியே திமுக-வின் இந்த அமைதிக்குக் காரணம் என்றும், காங்கிரஸ் விவகாரம் குறித்து யாரும் பகிரங்கமாகப் பேசக் கூடாது என ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்குக் கறாரான உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாகத் தேசிய அரசியலில் திமுக ஓரங்கட்டப்பட்டுத் தனித்து விடப்பட்ட சூழல் உருவாகியிருந்தாலும், மாநிலத்தின் முக்கிய கோரிக்கையான நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை நாடாளுமன்றத்தில் தி.மு.க தனித்து நின்று தீவிரமாக முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
