கௌதம் வாசுதேவ் மேனன் தமிழ் சினிமாவில் பணியாற்றும் இயக்குனர் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகராவார். 2001 ஆம் ஆண்டு மின்னலே என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் கௌதம் வாசுதேவ் மேனன்.
அதைத்தொடர்ந்து காக்க காக்க திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து வாரணம் ஆயிரம், என்னை நோக்கி பாயும் தோட்டா, நீதானே என் பொன்வசந்தம் போன்ற பல வெற்றி திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் கெளதம் வாசுதேவ் மேனன்.
2010 காலகட்டத்திற்கு பிறகு கௌதம் வாசுதேவ் மேனன் துருவ நட்சத்திரம் என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்கினார். அந்த திரைப்படம் இதுவரை வெளிவரவில்லை. இந்த திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது சூர்யா தான். ஆனால் சூர்யா இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். அது எனக்கு மிகவும் மன வருத்தமாக இருந்தது என்று சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூட கெளதம் கூறியிருப்பார்.
தற்போது வலைப்பேச்சு சேனலில் கௌதம் மேனனுக்கும் சூர்யாவுக்கும் நடந்த உண்மையான பிரச்சனை என்ன என்பதை கூறியிருக்கிறார்கள். அது என்னவென்றால் துருவ நட்சத்திரம் படத்தில் நடிப்பதாக சூர்யா கமிட்டான பிறகு கௌதம் மேனன் ஸ்கிரிப்ட் எழுதாமல் ஆறு மாத காலம் அவரை காக்க வைத்திருக்கிறார். அது மட்டுமில்லாமல் இந்த படத்தை நான் தயாரித்து இயக்குகிறேன் என்று சூர்யாவிடம் கூறியிருக்கிறார். சூர்யாவோ இல்லை நீங்கள் டைரக்ட் மட்டும் பண்ணுங்க தயாரிக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார். இதனால்தான் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. அதனால் விக்ரமை வைத்து இந்த திரைப்படத்தை தயாரித்து இயக்கி முடித்திருக்கிறார். ஆனால் இதுவரை அந்த படம் வெளியாகாமல் இருக்கிறது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மனித உரிமை காக்கும் கட்சித் தலைவரும் நடிகருமான கார்த்திக், சசிகலா…
தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலின் முதல்வர் வேட்பாளராகப் பார்க்கப்பட்ட அண்ணாமலை, தற்போது ஒரு தொகுதியில் கூட வேட்பாளராக…
கோயம்புத்தூர் வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், தனது இறுதிக்கட்டத் தேர்தல் பிரசாரத்தின் போது திமுக அரசை மிகக்…
ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக, அதன் இளம் நட்சத்திர வீரர் ஆயுஷ் மாத்ரே…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணியின் துரோகத்தை முறியடிக்குமாறு பாட்டாளி…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான இன்று, சென்னை நந்தனம் திடலில் உரையாற்றிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர்…