“அவர் கேக்கும் போதெல்லாம் நான் காஸ் குடுத்துருக்கன்”.. பிக் பாஸ் பாலாஜி வைத்த குற்றச்சாட்டை மறுக்கும் பிரபல இயக்குனர்..

By admin on தை 30, 2025

Spread the love

தயாரிப்பாளரும் இயக்குனருமான ஜே எஸ் சதீஷ்குமார் இயக்கிய திரைப்படம் தான் Fire. இந்த திரைப்படத்தில் பிக் பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான், சாந்தினி, சிங்கம்புலி, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இந்த படம் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டிருந்தது.

   

விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் பிரபலமான ரச்சிதா மகாலட்சுமி இந்த படத்தில் படுகிளாமராக நடித்திருப்பார். அதுவே படத்திற்கு பிளஸ் ஆகவும் அமைந்தது. என்ன இப்படி மாறிவிட்டார் என்று பலர் பேசினர். இதற்கிடையில் இந்த படத்தின் நாயகன் பாலாஜி முருகதாஸ் ரச்சிதா மகாலட்சுமி இயக்குனர் இடையே பல பிரச்சினைகள் போய்க்கொண்டிருந்ததை சமூக வலைத்தள பதிவாகவும் நேர்காணலாகவும் கூறியிருப்பார் முருகதாஸ். உண்மையில் நடந்தது என்ன என்பதை இயக்குனர் சதீஷ்குமார் தற்போது ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.

   

சதீஷ்குமார் கூறியது என்னவென்றால், பாலாஜி முருகதாஸுக்கு படம் ஆரம்பிக்கும் முன்னரே மற்ற ஹீரோயின்கள் எல்லாம் ஏற்கனவே பிரபலமானவர்கள் அவர்களுக்கு ஒரு சம்பளம் அமௌன்ட் பேசியிருந்தோம். நீங்கள் இப்போதுதான் முதல் படத்தில் நடிக்கிறீங்க. இது உங்களுக்கான வாய்ப்பு என்று நினைத்து நடிங்க நான் உங்களுக்கு இப்போ சம்பளம் தர மாட்டேன் படம் வெளியாகி பாசிட்டிவா போச்சுன்னா உங்களுக்கு அஞ்சு லட்சம் தரேன்னு நான் ஓப்பனா பேசி டாகுமெண்ட்ல கையெழுத்து வாங்கினேன். அவர் ஒத்துக்கொண்டு நல்ல கோ ஆபரேட் பண்ணி படம் ஃபுல்லா நடிச்சாரு டப்பிங் எல்லாம் பண்ணுனாரு.

 

டப்பிங் முடிஞ்ச அப்புறம் தான் என்கிட்ட வந்து பணம் கேட்டாரு. நான் வந்து முதல்ல சொன்னது தான் இப்பவும் சொல்றேன் என்று சொன்னேன். உடனே கோபத்தில் எனக்கு சம்பளம் தரவில்லை என்று பதிவு ஒன்றை சமூக வலைத்தளத்தில் போட்டார். அதற்கு அப்புறம் சிறிது காலத்திற்குப் பிறகு அவரே வந்து மன்னிப்பு கேட்டு பட பிரமோஷன் நிகழ்ச்சி எல்லாவற்றிலும் கலந்து கொண்டார். அதற்குப் பிறகு எனக்கு ரொம்ப அர்ஜென்ட் பணம் வேணும்னு கேட்டார். நானும் கொஞ்சம் பணம் கொடுத்தேன்.

இதில் ரட்சிதா மஹாலக்ஷ்மிக்கு என்ன பிரச்சனை என்றால் படத்தின் டீசரில் வந்து அவரை கொஞ்சம் ஹார்ட்டாக காட்டியது நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்தது. அதில் தான் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டது. பாலாஜி முருகதாஸ் பொருத்தவரைக்கும் நான் சொன்னபடி கரெக்டா தான் நடந்தேன். அவர்தான் மாறி மாறி சண்டை போடுறது பிரச்சனை பண்றது பட நிகழ்ச்சிக்கு வரேன்னு சொல்லுவாரு வர மாட்டேன்னு சொல்லுவாரு இப்படியெல்லாம் பண்ணிக்கிட்டு இருந்தாரு. உங்களோட முதல் வாய்ப்பை நீங்க பயன்படுத்துங்க அப்படின்னு தான் நான் கடைசி வரைக்கும் சொல்லிக்கிட்டே இருந்தேன் என்று மனம் திறந்து பேசி இருக்கிறார் இயக்குனர் சதீஷ்குமார்.