ஸ்ருதிஹாசன் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான நடிகை ஆவார். இவரது தந்தை கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். நடிப்பது மட்டுமல்லாமல் பல பாடல்களை பாடியும் இருக்கிறார் ஸ்ருதிஹாசன்.

2011 ஆம் ஆண்டு ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார் சுருதிஹாசன். முதல் படமே அவருக்கு வெற்றி படமாக அமைந்தது. மேலும் பல விருதுகளை பெற்று தந்தது. அதற்கு பிறகு 2012 ஆம் ஆண்டு “3” திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்திற்கும் அவருக்கு விருது கிடைத்தது.
அதற்கு பிறகு தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் ஸ்ருதிஹாசன். 2014க்கு பிறகு பூஜை, புலி, சிங்கம் 3 ஆகிய திரைப்படங்களில் நடித்தார் சுருதிஹாசன். சிங்கம் 3 படத்திற்கு பிறகு தமிழில் அவருக்கு சரியாக வாய்ப்புகள் அமையவில்லை. சரியான வாய்ப்புக்காக காத்திருக்கிறார் சுருதிஹாசன்.

இந்நிலையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட ஸ்ருதிஹாசனிடம் நீங்கள் காஸ்மெட்டிக் சர்ஜரி செய்ததை பற்றி கூறுங்கள் என்று கேட்கும் போது நான் Nose Surgery, Lip Filler Surgery ஆகியவற்றை செய்திருக்கிறேன். அது என்னுடைய விருப்பம் இது என்னுடைய முகம் தானே இதில் மற்றவர்கள் கமெண்ட் செய்வதற்கு என்ன இருக்கிறது என்று மனம் திறந்து பேசி இருக்கிறார் ஸ்ருதிஹாசன்.
