‘லியோ’ இல்லையாம்… முதன்முதலில் ‘லியோ’ படத்திற்கு வைக்கப்பட்ட தலைப்பு இதுதான்…! லோகேஷ் கனகராஜ் அதிரடி…!

By Begam

Published on:

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது 5-வது படமாக விஜய் நடிப்பில் லியோ படத்தை இயக்கியுள்ளார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் லியோ படம் வரும் அக்டோபர் 19-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

   

டிரெய்லரின் தொடக்கத்தில் ஒரு சீரியல் கில்லர் பற்றிய கதையை சொல்லும் விஜய், ரவுடிகளிடம் இருந்து தப்பிச்செல்ல முயற்சிக்கும் பல காட்சிகள் வருகிறது. ஒரு கட்டத்தில் என் குடும்பத்தை ஏன் தாக்குறீங்க என்று கேட்டு ஆக்ஷனில் இறங்குகிறார். அதனைத் தொடர்ந்து டிரெய்லர் ஆக்ஷன் அதளகமாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், கடைசியில் இதுக்குமேல சொல்லனும்னா  லியோ தான் உயிரோட வந்து சொல்லலும் என்று கௌதம்மேனன் பேசுவதுடன் டிரெய்லர் முடிவடைகிறது.

2.43 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்ட இந்த டிரெய்லர் முழுவதும் ஆக்ஷன் காட்சிகள் மட்டுமே இடம் பெற்றுள்ள நிலையில், ரசிகர்கள் லியோ ட்ரைலரை கொண்டாடி தீர்த்தனர். தற்பொழுது லியோ திரைப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில் லியோ திரைப்படத்திற்கு முதன்முதலில் வைக்கப்பட்டுள்ள தலைப்பு குறித்து அவர் பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ‘ படத்தின் கதையை எழுதும் போது ‘ஆண்டனி’ என்று தான் தலைப்பு வைத்ததாகவும், பின்னர் அதே தலைப்பில் மார்க் ஆண்டனி உட்பட சில படங்கள் வந்துவிட்டது. எனவே, லியோ என மாற்றியதாக’ கூறியுள்ளார்.

author avatar