தமிழ் சினிமாவில் மறக்க முடியாத படமாக வெளியானது இறுதிச்சுற்று திரைப்படம். பிரபல பாக்ஸிங் வீராங்கனை ரித்திகா சிங் முதன்முதலாக ஹீரோயினாக நடித்து தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி பெரிய வரவேற்ப்பை பெற்றது. அதேபோல் நீண்ட நாட்களாக தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்த மாதவனுக்கு பெரிய வரவேற்பாக அமைந்தது இந்த படம்.
அதுமட்டுமில்லாமல் இந்த படத்தை இயக்கிய சுதாவுக்கு சூர்யாவின் பட வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது இந்த படம்தான். இத்திரைப்படத்தில் நாசர், காளி வெங்கட், ராதாரவி, ரவீந்திர விஜய், எம் கே ரைனா, வெங்கடேசன், தேவராஜன், ராஜ் ஷர்மா என பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.
படம் முழுக்க முழுக்க குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து உருவான கதை என்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ‘இறுதிச்சுற்று என்னுடைய கதை தான்’ என பிரபல குத்துச்சண்டை வீராங்கனை ஒருவர் பேட்டி கொடுத்து அதிர்ச்சியை கிளப்பியுள்ளார்.
அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது, ‘என்னுடைய ரியல் ஸ்டோரி தான் ‘இறுதிச்சுற்று’ திரைப்படம். சுதா கொங்கரா, என்னை முதன்முதலில் நேரு ஸ்டேடியத்தில் தான் சந்தித்து பேசினார். கிட்டத்தட்ட மூன்று முதல் நான்கு மணி நேரம் பேசினோம். அவர் என்னுடைய வாழ்க்கை, விளையாட்டு ஆர்வம் உள்ளிட்டவற்றை ஒன்று விடாமல் கேட்டுக் கொண்டார். பிறகு மும்பையில் இருந்து ஒரு ரைட்டர் வரை வைத்து எழுதினார்கள். அப்பொழுது நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் சுதா கொங்கராவிடம் போய் நான் பேசினேன். அப்பொழுது அவர் எனக்கு கமிஷனர் தெரியும் என மிரட்டினார்’என கூறியுள்ளார். இதோ அவரின் பேட்டி…
தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த 15 ஆண்டுகள் என்பது வெறும் ஆட்சி மாற்றங்களை மட்டுமல்ல, வாக்காளர்களின் மனநிலையிலும் பெரும் முதிர்ச்சியை…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இன்று அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு - ஓசூர்…
உத்தரப் பிரதேச மாநிலம் பதாயூன் மாவட்டத்தில், குடும்பச் சண்டையின் உச்சக்கட்டமாக ஐந்து மாதப் பச்சிளம் குழந்தையைத் தந்தையே மாடியிலிருந்து வீசிக்…
அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளைத் திரும்ப வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க…
மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில், 25 வயது இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து…
நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் 2026 பொதுத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள வாக்குப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும்…