தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் தொடர்ச்சியாகப் பல்வேறு குழப்பங்களும், உட்கட்சிப் பூசல்களும் நிலவி வரும் சூழலில், திருவண்ணாமலையில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அதிமுகவின் எதிர்காலம் குறித்துத் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். பாஜகவுடன் கூட்டணி வைப்பதைத் தவிர்த்துத் தனித்துப் போட்டியிட்டால் மட்டுமே அதிமுகவின் செல்வாக்கு நிலைத்து நிற்கும் எனத் தேர்தலுக்கு முன்பே தான் எச்சரித்ததாகவும், அதை அவர்கள் கேட்காததால் தான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், தவெகவின் 100 நாள் ஆட்சியைக் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த திருமாவளவன், தவெகவுடன் இணைந்து பயணிக்கும் ஆளுங்கட்சி என்ற முறையில் அவர்களின் 100 நாள் ஆட்சியை வரவேற்பதாகவும், பலரும் மனம் திறந்து பாராட்டும் வகையில் இந்த ஆட்சித் தொடர வேண்டும் என்றும் வாழ்த்தினார். அத்துடன், உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விசிக மாநாட்டிலேயே தவெகவுடனான கூட்டணி உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும், இனிவரும் காலங்களில் தவெகவுடன் இணைந்து பயணிப்போம் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
