ஆணவக் கொலையை மையமாகக் கொண்ட ‘நெல்லை பாய்ஸ்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், சினிமாவில் நிலவும் வன்முறை மற்றும் கவர்ச்சிக் கலாசாரம் குறித்துப் பேசினார்.
“வன்முறை இல்லாமல் திரைப்படங்களை எடுக்க முடியாதா?” என்று கேள்வி எழுப்பிய அவர், திருநெல்வேலி என்றாலே அரிவாளும் வன்முறையும் தான் என்ற பிம்பம் உருவாக்கப்படுவது வேதனை அளிப்பதாகவும், அங்குள்ள அறிஞர்கள் மற்றும் நீதிபதிகளின் சிறப்புகளைத் திரையுலகம் கண்டுகொள்வதில்லை என்றும் ஆதங்கப்பட்டார். நூறு பேரை அடித்து வீழ்த்தும் ரவுடியிசத்தை ஹீரோயிசமாகக் காட்டுவதை இயக்குநர்கள் தவிர்க்க வேண்டும் என்றும், தொடர் வன்முறைக் காட்சிகள் பொதுமக்களிடையே அதைச் சாதாரணமானதாக மாற்றுகிறது.
மேலும், குத்துப்பாட்டு, நெருக்கமான காதல் மற்றும் கவர்ச்சிக் காட்சிகள் மட்டுமே வியாபார உத்தி என்ற வரையறையை உடைக்க வேண்டும். வீரம் என்பது அரிவாளைத் தூக்குவது அல்ல; நெருக்கடிகள் சூழ்ந்தபோதும் கொள்கை நெறிப்படி வாழ்வதே உண்மையான வீரம். இறுதியாக, டாக்டர் அம்பேத்கர் போன்றவர்கள் ஆயுதம் ஏந்தவில்லை, ஆனால் அவரது அரசியல்தான் இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தின் மையமாக இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டி, புரட்சிக்கும் வன்முறைக்கும் உள்ள வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…