கவர்ச்சி, குத்துப்பாட்டு இருந்தால் தான் சினிமாவா….? வீரம் என்பது என்ன தெரியுமா…? சீறிய விசிக தலைவர் திருமாவளவன்…!!

By Devi Ramu on கார்த்திகை 19, 2025

Spread the love

ஆணவக் கொலையை மையமாகக் கொண்ட ‘நெல்லை பாய்ஸ்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், சினிமாவில் நிலவும் வன்முறை மற்றும் கவர்ச்சிக் கலாசாரம் குறித்துப் பேசினார்.

“வன்முறை இல்லாமல் திரைப்படங்களை எடுக்க முடியாதா?” என்று கேள்வி எழுப்பிய அவர், திருநெல்வேலி என்றாலே அரிவாளும் வன்முறையும் தான் என்ற பிம்பம் உருவாக்கப்படுவது வேதனை அளிப்பதாகவும், அங்குள்ள அறிஞர்கள் மற்றும் நீதிபதிகளின் சிறப்புகளைத் திரையுலகம் கண்டுகொள்வதில்லை என்றும் ஆதங்கப்பட்டார். நூறு பேரை அடித்து வீழ்த்தும் ரவுடியிசத்தை ஹீரோயிசமாகக் காட்டுவதை இயக்குநர்கள் தவிர்க்க வேண்டும் என்றும், தொடர் வன்முறைக் காட்சிகள் பொதுமக்களிடையே அதைச் சாதாரணமானதாக மாற்றுகிறது.

   

மேலும், குத்துப்பாட்டு, நெருக்கமான காதல் மற்றும் கவர்ச்சிக் காட்சிகள் மட்டுமே வியாபார உத்தி என்ற வரையறையை உடைக்க வேண்டும். வீரம் என்பது அரிவாளைத் தூக்குவது அல்ல; நெருக்கடிகள் சூழ்ந்தபோதும் கொள்கை நெறிப்படி வாழ்வதே உண்மையான வீரம்.  இறுதியாக, டாக்டர் அம்பேத்கர் போன்றவர்கள் ஆயுதம் ஏந்தவில்லை, ஆனால் அவரது அரசியல்தான் இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தின் மையமாக இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டி, புரட்சிக்கும் வன்முறைக்கும் உள்ள வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.