அடுத்த பரபரப்பு… திமுக கூட்டணியில் குண்டை வீசிய திருமாவளவன்… செம ஷாக்கில் ஸ்டாலின்…!

By Nanthini on மார்கழி 13, 2025

Spread the love

தமிழகத்தில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள விஜய் தயாராகி வருகின்றார். கரூர் சம்பவத்திற்கு பிறகு தமிழக வெற்றி கழகம் கட்சி பல சவால்களை சந்தித்தாலும் தற்போது மீண்டும் தனது கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் விஜய் தீவிரம் காட்டி வருகிறார். தற்போது தமிழகத்தில் விஜய்க்கு மிகப்பெரிய ஆதரவு உள்ளது. இதனிடையே தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநாட்டிலேயே அரசியல் எதிரி திமுக என்றும் கொள்கை எதிரி பாஜக என்றும் விஜய் அறிவித்திருந்தார்.

எதிரியாக திமுக இருக்கும் பட்சத்தில் திமுகவின் கூட்டணி கட்சிகள் சில தமிழக வெற்றி கழகம் கட்சியையும் விஜயையும் விமர்சிப்பதை விட்டுவிட்டு அவருக்கு ஆதரவாகவும் அவர் அரசியலில் வெற்றி பெற அறிவுரைகளையும் வழங்கி வருகின்றன. அதிலும் முக்கியமாக திமுக கூட்டணியில் நீண்ட காலமாக அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு விஜய் வருகைக்கு பிறகு மாறி இருப்பது தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், செங்கோட்டையன் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைந்த போது விஜய் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

   

இப்படியான நிலையில் ஆபத்தான சூழலில் இடதுசாரிகள் ஒருங்கிணைந்து இருக்க வேண்டிய தேவை இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் லெனினீஸ்ட் கட்சி மாநாட்டில் பேசிய அவர், கட்சி தொடங்கிய உடனேயே நான்தான் முதலமைச்சர் என கூறிக்கொண்டு இன்று பலபேர் வந்துள்ளனர். அதுதான் காற்றடிக்கும் திசை என பல பேர் அங்கு தாவுகிறார்கள். அந்த சதி அரசியலை முறியடிக்க வேண்டும். திமுக மீதும் அரசு மீதும் எங்களுக்கு விமர்சனங்கள் உண்டு. அந்த விமர்சனங்களோடு தான் கூட்டணியை போற்றுகிறோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். ஏற்கனவே கடந்த சில நாட்களாக திமுகவிற்கு எதிராக பல விமர்சனங்களை கூறிவரும் திருமாவளவன் தற்போது புதிய பரபரப்பை கிளப்பியுள்ளார்.