தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தற்போது தீவிரமாக தேர்தல் பணிகளில் களமிறங்கியுள்ளன. குறிப்பாக திமுக தற்போது ஆட்சியில் உள்ள நிலையில் மீண்டும் தமிழகத்தில் தங்களுடைய ஆட்சி தான் அமைய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதால் அதற்கான வேலைகளை முதல்வர் ஸ்டாலின் தனது கட்சி நிர்வாகிகளை வைத்து செய்து வருகின்றார். அதேசமயம் திமுகவின் கூட்டணியையும் பலப்படுத்தும் முயற்சியில் ஸ்டாலின் களம் இறங்கியுள்ளார். இப்படியான நிலையில் திமுகவின் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சமீபத்தில் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார்.
அப்போது, தேர்தல் கூட்டணி தொடர்பான கேள்விக்கு, கூட்டணியில் அதிக தொகுதிகளை பெறுவதை விட அதிகாரத்தை பெறுவது தான் இலக்கு. கூட்டணி நிரந்தரமானது இல்லை, தனித்துப் போட்டியிட வேண்டிய தேவையும் ஏற்படலாம். அதற்கான காலம் மற்றும் கட்டமைப்பு தற்போது ஏற்படாமல் இருக்கலாம். ஆனால் அதற்கான வலிமையை நாங்கள் பெற்று வருகிறோம் என்ற திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதனால் வருகின்ற தேர்தலில் திமுகவின் கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி விளக்குகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
