“மக்களிடம் கேட்காம பண்ண முடியாது”…. பரந்தூர் உதாரணத்தை காட்டி விஜய்க்கு திருமாவளவன் போட்ட செக்… முதலமைச்சருக்கு எதிராக திரும்பிய கூட்டணி கட்சிகள்…!

By Nanthini on புரட்டாதி 14, 2026

Spread the love

பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான முயற்சிகளுக்குத் தொடர்ந்து எதிர்ப்புகள் வலுத்து வரும் சூழலில், இத்திட்டம் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்த கருத்துகள் பெரும் அரசியல் விவாதத்தை உருவாக்கியுள்ளன. தற்போதைய தலைமைச் செயலகத்தில் இடப்பற்றாக்குறை நிலவுவதால், புதிய கட்டிடம் கட்டுவதற்கான இடமாக பட்டினம்பாக்கத்தை தவெக அரசு தேர்வு செய்தது. இருப்பினும், அப்பகுதி மீனவ மக்களின் வாழ்வாதாரப் அச்சங்கள் மற்றும் தொடர் எதிர்ப்புகள் காரணமாக இத்திட்டம் சிக்கலைச் சந்தித்துள்ளது.

இந்தப் பின்னணியில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், மக்கள் ஒப்புதல் இல்லாமல் எந்தவொரு பெரிய திட்டத்தையும் அரசால் முழுமையாகச் செயல்படுத்த முடியாது எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பரந்தூர் விமான நிலையத் திட்டப் போராட்டங்களையே அவர் சான்றாகச் சுட்டிக்காட்டினார். பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதாக முடிவெடுத்திருந்தாலும், அப்பகுதி மக்களின் கருத்துகளைக் கேட்டறிந்த பிறகே அரசு அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

   

அரசியல் நிலவரம் மற்றும் இடைத்தேர்தல் குறித்துப் பேசிய அவர், தங்களது கூட்டணி மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியாக வலுவாக இயங்கி வருவதாகத் தெரிவித்தார். தவெக அரசுக்கு ஆதரவளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பட்டினம்பாக்கம் விவகாரத்தில் மக்களைத் திரட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், தொடக்கத்திலிருந்தே கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சிக்கு மட்டுமே ஆதரவு; சித்தாந்த ரீதியாகத் தனித்தே இயங்குவோம் என்ற தெளிவான நிலைப்ாட்டைக் கொண்டிருந்ததாகக் கூறினார்.

   

இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்துப் போட்டியிடுவது ஆட்சியைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்காது என்பதால், அது தவெக அரசுக்கு எதிரான நிலையோ அல்லது திமுகவுக்கு ஆதரவான நிலையோ அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தினார். ஜனநாயக நாட்டில் பலமுனைப் போட்டிகள் இயல்பானவை என்றும், கூட்டணிக் கட்சிகளின் இத்தகைய சுயாட்சியான முடிவுகள் தங்களது கூட்டணியின் ஒட்டுமொத்தப் பலத்தைப் பாதிக்காது என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.