தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள தவெக – திமுக மோதல் விவகாரத்தில், முதலமைச்சர் விஜய் குறித்து திமுக பெண் கவுன்சிலர் ஒருமையில் பேசிய சர்ச்சைக்கு விசிக தலைவர் தொல். திருமாவளவன் வெளிப்படையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திருமாவளவன், அரசியல் விமர்சனங்கள் எழுவது இயல்பு என்றாலும், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைத் தலைவர்கள் நாகரீக வரம்பை மீறிப் பேசுவது ஆரோக்கியமானதல்ல என்று தெரிவித்துள்ளார்.
தவெகவை ஏன் திமுகவினர் தொடர்ச்சியாக விமர்சிக்கிறார்கள் என்பதைத் திமுக தலைமைதான் கேட்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், பொதுமேடைகளில் வரம்பு மீறும் கலாச்சாரம் அதிகரித்துள்ளதைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். திமுகவை விசிக தலைவர் நேரடியாக விமர்சித்துள்ள இந்தச் செய்தி தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
