“பாஜகவின் கருவி தான் விஜய்” தமிழகத்தில் சித்து விளையாட்டை தொடங்கிட்டாங்க… தோல்.திருமா பகீர் குற்றசாட்டு..!!

By Soundarya on ஐப்பசி 1, 2025

Spread the love

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக TVK தலைவர் விஜய் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் தான் நாங்கள் பேசினோம் . அதை தவிர வேறு எந்த தவறும் செய்யவில்லை. பழிவாங்க நினைத்தால்என்னை என்ன வேண்டுமானானலும் செய்யுங்கள். அவர்களை விட்டு விடுங்கள் என்று தெரிவித்திருந்தார். இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கூறியிருப்பதாவது ,க”ரூர் பெருந்துயரத்திற்காக விஜய் வருந்துவதாக தெரியவில்லை. பத்து மணி நேரமாக அவரை காணும் பேராவலோடு காத்திருந்தவர்கள் அடி எடுத்து வைக்கக் கூட இடமில்லாமல் கூட்டத்தில் சிக்கி இறந்துள்ளார்கள்.

நள்ளிரவில் கரூருக்கு சென்று அங்கு கதறி அழுத மக்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். முதல்வர் மீது பழி சுமத்தி விஜய் பேசி இருப்பது அவருடைய நேர்மை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. தமிழகத்தில் வெளிப்படையாகவே தங்களுடைய சித்து விளையாட்டை பாஜக தொடங்கிவிட்டது. தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பாஜகவின் கருவிதான் என்பது உறுதியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.