பகிரங்க மன்னிப்பு கேட்கணும்… 41 உயிர்களுக்கு விஜய் முழு பொறுப்பேற்கணும்… முத்தரசன் காட்டம்..!!

By Soundarya on ஐப்பசி 1, 2025

Spread the love

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக TVK தலைவர் விஜய் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் தான் நாங்கள் பேசினோம் . அதை தவிர வேறு எந்த தவறும் செய்யவில்லை. பழிவாங்க நினைத்தால்என்னை என்ன வேண்டுமானானலும் செய்யுங்கள். அவர்களை விட்டு விடுங்கள் என்று கூறியிருந்தார். இதுதொடர்பாக CPI  முன்னாள் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியதாவது, “TVK  தலைவர் விஜய் நேற்றைக்கு வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஆணவத்தின் உச்சம்.

மக்களிடம் விஜய் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். 41 மரணத்திற்கு விஜய் முழு பொறுப்பேற்க வேண்டும். இந்த மரணத்திற்கு பிறகும் விஜய் பாடம் கற்கவில்லை என்றால் தமிழ்நாட்டு மக்கள் உரிய பாடத்தை புகட்டுவார்கள்” என்று காட்டமாக தெரிவித்துள்ளார்