#image_title
சினிமாத்துறையை பொறுத்தவரை நடிகர் நடிகைகள் தங்களுக்குள் காதலித்து திருமணம் செய்து கொள்வது வழக்கமாகி விட்டது. அதுவும் சின்னத்திரையில் தற்பொழுது சர்வசாதாரணமாகி விட்டது. ராஜா ராணி சீரியல் ஆலியா மானசா , சஞ்சீவ் இவர்களை போல இன்னும் எண்ணற்ற ஜோடிகளை கூறலாம்.
இவர்களின் வரிசையில் தற்பொழுது ஒரு புது ஜோடி இணைத்துள்ளது. அவர்கள் யார் தெரியுமா..? வேறு யாருமில்லை. ‘திருமகள்’ சீரியலில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த நடிகர் சுரேஷ் சுரேந்தர் அதே சீரியலில் நடித்து வந்த நடிகை நிவேதிதாவை திருமணம் செய்ய இருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஓவியா’ என்கிற சீரியலின் மூலமாக அறிமுகமானவர் நடிகர் சுரேந்தர். இதைத்தொடர்ந்து அவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமகள்’ சீரியலில் ராஜா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். தற்பொழுது இவர் ‘மலர்’ சீரியலில் அர்ஜுனாக நடித்து வருகிறார்.
#image_title
இந்நிலையில் சுரேந்தர் ‘திருமகள்’ சீரியலில் தன்னுடன் நடித்த நடிகை நிவேதிதாவை திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறார். நீண்ட நாட்களாக இருவரும் பழகி வந்த நிலையில், தற்போது இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவித்திருக்கின்றனர். நடிகை நிவேதிதா கல்யாணப்பரிசு, திருமகள், சுந்தரி ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். தற்பொழுது இத்தகவலை அறிந்த ரசிகர்களும், பிரபலங்களும் அவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…