திமுகவுக்கு டாட்டா? “விஜய்க்கு சப்போர்ட்” கூட்டணியை மாற்றும் விசிக? திருமாவளவன் கொடுக்கப்போகும் அந்த ‘மெகா’ ட்விஸ்ட்..!!

By Soundarya on வைகாசி 11, 2026

Spread the love

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கைகோர்த்துள்ளது. அதேபோல், விசிக-வும் விஜய் ஆட்சி அமைக்க நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ளது. இதன் மூலம் தவெக, காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக மற்றும் ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்கும் சூழல் உருவாகியுள்ளது. இருப்பினும், விசிக இன்னும் அதிகாரப்பூர்வமாக திமுக கூட்டணியில் நீடிக்கிறதா அல்லது காங்கிரஸைப் போல முழுமையாக தவெக கூட்டணிக்கு மாறிவிட்டதா என்பதில் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது.

இந்தக் குழப்பங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள விசிக தலைவர் திருமாவளவன், தமிழகத்தில் ஆளுநர் ஆட்சியைத் தவிர்க்கவும், அரசியல் நிலைத்தன்மையை உருவாக்கவுமே விஜய்க்கு ஆதரவு அளித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். “தற்போது வரை நாங்கள் திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்; இந்த முடிவு தற்காலிகமானது” என்று அவர் கூறினாலும், எதிர்காலக் கூட்டணி குறித்து இன்னும் இரண்டு வாரங்களில் விசிக உயர்நிலைச் செயல்திட்டக் குழுவைக் கூட்டி இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். விசிக-வின் இந்த அடுத்தகட்ட நகர்வு, தமிழகத்தின் “இந்தியா” (I.N.D.I.A) கூட்டணியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கிய முடிவாகப் பார்க்கப்படுகிறது.