மத்தியப் பிரதேச மாநிலம் ரைசென் மாவட்டத்தில், கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே திருமணமான ரீனா என்ற பெண், தனது காதலன் அருண் படேலுக்காகக் கணவரை விவாகரத்து செய்துவிட்டு அவருடன் வசித்து வந்துள்ளார். இந்தச் சூழலில், ரீனாவுக்கும் வீரு ஜாட் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று ரீனாவைக் காண்பதற்காக வீரு அவரது வீட்டிற்குச் சென்றபோது, அங்கு இருந்த அருண் மற்றும் ரீனாவுக்கும் வீருவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்தத் தகராறு முற்றிய நிலையில், அருண் படேல் தனது நண்பர் ஒருவருடன் சேர்ந்து வீரு ஜாட்டை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த வீரு பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ஒரு பெண்ணுக்காக இரண்டு காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் உயிர் பறிபோனது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலை தொடர்பாக ரீனா, அவரது காதலன் அருண் மற்றும் உடந்தையாக இருந்த நண்பர் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
