“விஜய் பிளானுக்கு ஆப்பு வச்ச திருமா?”…. தவெக மேலிடத்தை உலுக்கிய ‘கூட்டணி’ அறிவிப்பு…. ஸ்தம்பித்த தமிழக அரசியல்….!

By Nanthini on ஆவணி 20, 2026

Spread the love

அரசியல் களத்தில் நிலவும் தற்போதைய நகர்வுகள் குறித்துப் பலதரப்பட்ட விவாதங்கள் எழுந்து வருகின்றன. தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கப்போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்த கருத்து, தவெக தரப்பிற்கே எதிர்பாராத அதிர்ச்சியைக் கொடுத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

மற்றொருபுறம், பாமகவை தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவரும் முயற்சியாகவே செளமியாவின் தந்தைக்குத் தகைசால் விருது வழங்கப்பட்டதாகக் கூறப்படும் வேளையில், தவெக மற்றும் பாமக கூட்டணி அமைந்தால் விசிக அங்கு தொடர முடியாத சூழல் உருவாகும். இத்தகைய பின்னணியில், தவெகவுடனான கூட்டணி தொடரும் என்று திருமாவளவன் நேரடியாக அறிவித்ததன் மூலம், முதலமைச்சர் விஜய்யின் திட்டங்களுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாகப் பரவலாகப் பேசப்படுகிறது.