குஷியோ குஷி…! எந்த டிகிரி முடித்திருந்தாலும் ஓகே… தமிழ்நாட்டில் மட்டுமே 675 வங்கி வேலைகள்… IBPS அதிரடி அறிவிப்பு…!!

By Gayathri on ஆவணி 20, 2026

Spread the love

இந்திய வங்கிப் பணியாளர் தேர்வாணையம், நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 11,403 ‘வாடிக்கையாளர் சேவை உதவியாளர்’ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு மட்டும் 675 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மாத ஊதியமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும் இப்பணிக்கு, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருப்பது அவசியமாகும். அத்துடன் அடிப்படை கணினி அறிவும், விண்ணப்பிக்கும் மாநிலத்தின் அலுவல் மொழியை நன்கு பேச, எழுத மற்றும் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது 20 முதல் 28-க்குள் இருக்க வேண்டும்; இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

இப்பணிகளுக்கான ஆட்கள் முதல்நிலைத் தேர்வு முதன்மைத் தேர்வு என இரண்டு கட்ட கணினி வழித் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். முதல்நிலைத் தேர்வுகள் அக்டோபர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளிலும், முதன்மைத் தேர்வு டிசம்பர் 27-ஆம் தேதியும் நடைபெறும். இத்தேர்வில் தவறான பதில்களுக்கு மதிப்பெண் குறைப்பு முறை உள்ளது; நேர்காணல் கிடையாது. தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தேர்வர்கள் தங்களது வசதிக்கேற்ப வினாத்தாளை தமிழ், ஆங்கிலம் அல்லது இந்தி மொழிகளில் எதிர்கொள்ளலாம்.

   

வங்கித்துறையில் நுழைய விரும்பும் தகுதியான இளைஞர்கள், தங்களது விண்ணப்பங்களை www.ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.850-ம், எஸ்சி/எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.175-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஆகஸ்ட் 21, 2026 என அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆர்வமுள்ள பட்டதாரிகள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி உடனடியாக விண்ணப்பிக்கலாம்.