தினமும் காலையில் இந்த விஷயங்களை மட்டும் மிஸ் பண்ணாம செய்யுங்க… அந்த நாள் முழுக்க நீங்க சுறுசுறுப்பாக இருக்கலாம்!

By Elango on மார்கழி 12, 2025

Spread the love

பொதுவாகவே ஆண்கள் பெண்கள் யாராக இருந்தாலும் தங்களை கட்டுக்கோப்பான உடல் அமைப்புடன் ஆரோக்கியமாக சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். ஆனால் இன்றைய பாஸ்ட் புட் உலகத்தில் நினைத்ததை நினைத்த நேரத்தில் சாப்பிடுவது, ஓரிடத்தில் அமர்ந்து நாள் முழுவதும் மணிக்கணத்தில் வேலை பார்ப்பது, சமூக வலைதளங்களின் பாதிப்பால் தூக்கமின்மை, உடற்பயிற்சி செய்யாதது, வேலை நெருக்கடியால் மன அழுத்தம் போன்ற காரணங்களால் உடல் மற்றும் மன ஆரோக்கியம் பலமாக பாதிக்கப்படுகிறது.

அதனால் இளம் வயதினர் கூட நீரிழிவு உடல் பருமன் இதய நோய் அபாயங்கள் சிறுநீரக கல் கல்லீரல் பாதிப்பு போன்ற பாதிப்புகளால் அவதிப்படுகின்றனர். அல்சைமர், மன அழுத்தம் ஆன்சைட் பிரச்சனை என உளவியல் ரீதியான பாதிப்புகளும் அதிகரிக்கின்றன. இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண நமது வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையில் மாற்றம் என்பது இன்றியமையாதது. தினமும் காலையில் இந்த விஷயங்களை பின்பற்றினால் கண்டிப்பாக நாம் ஆரோக்கியமாக வாழலாம்.

   

ஆரோக்கியமான தூக்கம் – இரவு முழுவதும் ஆழ்ந்த உறக்கத்தை பெற வேண்டும். அதற்கு தூங்குவதற்கு முன்பு இதமான சூட்டில் குளிக்கலாம். நல்ல புத்தகங்களை படிக்கலாம். 30 நிமிடங்களுக்கு முன்பே போனை தூக்கி தூர வைத்து விட வேண்டும். 7 மணி நேரம் முதல் 8 மணி நேர தூக்கம் அவசியம்.

   

போதுமான நேரம் – வேலைக்கு செல்வதற்கான போதுமான நேரத்தை ஒதுக்க வேண்டும் உடல் ரீதியாக மனரீதியாக வேலைக்குச் செல்ல போதுமான நேரம் ஒதுக்குவது அவசியம்.

 

தினமும் காலையில் ஒரு டம்ளர் தண்ணீர் – உடல் ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்வுக்கும் உடலில் நீரேற்றம் முக்கியம். எனவே காலையில் எழுந்ததும் முதலில் டீ அல்லது காபி குடிக்காமல் ஒரு கிளாஸ் தண்ணீரை குடித்துவிட வேண்டும்.

உடற்பயிற்சி – காலையில் குறைந்தது 30 நிமிடங்கள் நடைபயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடனம் கூட ஒரு விதமான உடற்பயிற்சி தான். இது மனசோர்வை தடுக்கும். உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

ஆரோக்கியமான – காலை உணவு முக்கியம். ஒரு கிண்ணம் ஓட்ஸ் அல்லது ஸ்மூத்தி உங்கள் உடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கும். ஒருபோதும் காலை உணவை தவிர்க்கக்கூடாது.

தியானம் – தினமும் காலையில் நேர்மறையான உறுதிமொழிகளை எடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இது தன்னம்பிக்கையை அதிகரிக்கும். தியானம் செய்வது உடல் ஆரோக்கியம் மன ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. ஆழமாக சுவாசிக்க நேரம் ஒதுக்குங்கள் மது. புகைப்பழக்கம் போன்ற தீய பழக்கங்கள் இருந்து விலகி இருப்பதும் மிகவும் முக்கியம்.