தினமும் 20 முதல் 30 நிமிடம் நடை அல்லது யோகா செய்தால் ரத்த ஓட்டம் சீராகி இதயம் வலிமை பெறும். உடல் செயல்பாடு ரத்த ஓட்டத்தை சீராக்கும்.
கீரை பருப்பு நெல்லிக்காய் பூண்டு போன்றவை உணவு சேர்த்தால் கொழுப்பு அளவு குறைந்து இதயத்திற்கு ஆதரவு கிடைக்கும். பழங்கள் காய்கறிகள் இதயத்துக்கு நன்மை தரும்.
அதிக உப்பு எண்ணெய் பொரியல் ஜங் ஃபுட் தவித்தால் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படும். சிவப்பு இறைச்சி உணவுகளை தவிர்த்தல் முக்கியம்.
தினமும் போதுமான தண்ணீர் குடித்தால் ரத்தம் தடிமனாகாமல் இதயத்தின் சுமை குறையும். உடலில் போதிய நீரேற்றம் இருப்பது அவசியம்.
கோபம் கவலை மன அழுத்தம் குறைத்து ஆழ்ந்த மூச்சு பயிற்சி செய்தால் இதயத்துக்கு அமைதி கிடைக்கும். எப்போதும் பரபரப்பின்றி மனதை லேசாக ரிலாக்ஸாக வைத்திருக்க வேண்டும். இந்த விஷயங்களை பின்பற்றினால் உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
