xr:d:DAF0PH-zjcg:3,j:8764414152311843591,t:23111512
பொடுகு என்பது வெறும் முடிப் பிரச்சினை மட்டுமல்ல, இது உச்சந்தலையில் ஏற்படும் ஒரு பூஞ்சைத் தொற்று மற்றும் தோல் பிரச்சினை என்று மருத்துவர் மைத்ரேயி ராஜேந்திரன் கூறுகிறார். இந்தப் பொடுகுத் தொல்லை அதிகமாகாமல் இருக்க, அரிப்பு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய ஐந்து முக்கிய விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
தலைக்குக் குளிப்பதைத் தவிர்க்கக் கூடாது: அழுக்கு, வியர்வை மற்றும் அதிகப்படியான சீபம் சுரப்பு பொடுகை மோசமாக்கும் என்பதால், வாரத்தில் அடிக்கடி கட்டாயம் தலைக்குக் குளித்துச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
கண்டிஷனரை உச்சந்தலையில் போடக் கூடாது: கண்டிஷனர் என்பது தலைமுடிக்கு மட்டுமே; அது ஸ்கால்ப்பில் பட்டுவிட்டால், துளைகளை மூடி பொடுகுத் தொல்லையை அதிகரிக்கும். அதை முடியின் பாதி நீளத்தில் மட்டும் பயன்படுத்தவும்.
சீப்பு மற்றும் துண்டுகளைப் பகிர்வதைத் தவிர்க்கவும்: பூஞ்சை தொற்று காரணமாக பொடுகு பரவ வாய்ப்பிருப்பதால், வீட்டில் உள்ள அனைவரும் ஒரே சீப்பு, டவல் போன்ற தனிப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
அதிக மன அழுத்தத்தைத் தவிர்க்கவும்: மன அழுத்தம் அதிகரிக்கும்போது தூக்கமின்மை உண்டாகும். போதுமான தூக்கமின்மையும் பொடுகுப் பிரச்சினைக்கு முக்கியக் காரணம் என்பதால், மன அழுத்தத்தைக் குறைக்க முயற்சி செய்யுங்கள்.
இரவு முழுவதும் எண்ணெய் தடவக் கூடாது: இரவு முழுவதும் தலையில் எண்ணெய் வைத்திருப்பது அல்லது எண்ணெய் பிசுபிசுப்புடன் வெளியில் செல்வது கூடாது. எண்ணெய் வைக்க விரும்பினால், குளிப்பதற்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்கு முன் மட்டும் தடவி, பின்னர் சுத்தமாகக் குளிக்கவும். இதையும் மீறிப் பொடுகு அதிகரித்தால், தோல் மருத்துவரை அணுகுவது நல்லது.
டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…
பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…
தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…
தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…