பி.ஸ் மித்ரன் இயக்கத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு சர்தார் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் கார்த்தி அப்பா மகன் என இரண்டு கேரக்டரில் நடித்தார். மேலும் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். சமீபத்தில் தான் சர்தார் 2 படத்தின் ஷூட்டிங் தொடங்கியது.
நேற்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் சண்டை காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக சண்டை பயிற்சியாளரான ஏழுமலை என்பவர் 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்ததால் அவரது மார்பு மற்றும் வயிற்று பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஏழுமலை பரிதாபமாக உயிரிழந்தார்.
சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் சண்டை பயிற்சியில் ஈடுபட்டதால் ஏழுமலை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் சண்டை பயிற்சியில் ஈடுபடுவதற்கு முன்பு தேவையான மருத்துவ உபகரணங்கள், ஆம்புலன்ஸ், மருத்துவர் என அனைத்தும் தயாராக இருக்கிறதா? என்பதை கவனித்துக் கொள்ள வேண்டும்.
முன்னணி நடிகரான சூர்யா எப்போதும் சண்டை காட்சி சூட்டிங் கலந்து கொள்வதற்கு முன்பு மருத்துவ உபகரணங்கள் இருக்கிறதா? ஆம்புலன்ஸ் தயாராக இருக்கிறதா? மருத்துவர் இருக்கிறாரா? என்பதை கவனித்து விட்டு தான் சண்டை கட்சியில் நடிப்பாராம். மற்ற நடிகர்கள் அப்படி இருக்கிறார்களா என்பது தெரியவில்லை. சண்டை பயிற்சியில் ஈடுபடும் முன்பு அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதை பார்த்து எச்சரிக்கை நடவடிக்கையுடன் ஷூட்டிங் நடத்த வேண்டும் என சினிமா வட்டாரத்தில் கோரிக்கை எழுந்துள்ளது.