“சீக்கிரம் பாஸ்வேர்டு சொல்லு…” ஐபோனை திருடிட்டு மெசேஜ் அனுப்பிய திருடன்… போலீசை வெளுத்து வாங்கிய பெண்… ஷாக்கிங் வீடியோ வைரல்…!!

By Devi Ramu on ஐப்பசி 9, 2026

Spread the love

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனின் கிளெமென்ட் டவுன் பகுதியில் கவுசிகி தியானி என்ற பெண்ணின் விலைமதிப்பற்ற ஐபோன் கடந்த செப்டம்பர் 12 அன்று திருடு போனது. இந்நிலையில், திருடப்பட்ட போனில் தெரிந்த அவசரத் தொடர்பு எண்ணை வைத்து, திருடன் அந்த பெண்ணிற்கு வாட்ஸ்அப் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் “சீக்கிரம் போனின் பாஸ்வேர்டை சொல்லு” எனக் தொடர்ந்து மெசேஜ் அனுப்பி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளான்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் இரவு 10 மணிக்கே காவல் நிலையம் சென்று ஆதாரங்களுடன் புகார் அளிக்க முயன்றபோது, போலிஸார் “நாளை காலை வா” என அலட்சியமாகத் திருப்பி அனுப்பியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். சந்தேக நநபரின் சிசிடிவி காட்சிகள் மற்றும் போட்டோ ஆதாரங்கள் இருந்தும் போலிஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி அந்தப் பெண் வீடியோ வெளியிட, “ஐபோனை அன்லாக் செய்ய முடியாமல் ஓனர் கிட்டயே பாஸ்வேர்டு கேட்குறானே” என நெட்டிசன்கள் அந்த திருடனை கிண்டல் செய்து வருகின்றனர்.