அய்யய்யோ… என்னடா இது… கால்பந்து மைதானத்தில் புகுந்து… ரசிகரின் கழுத்தைக் கடித்த குரங்கு… கொல்கத்தாவில் நடந்த சம்பவம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

By Swetha on ஐப்பசி 9, 2026

Spread the love

கொல்கத்தாவில் உள்ள சால்ட்லேக் மைதானத்தில் இந்தியா மற்றும் உருகுவே அணிகளுக்கு இடையே நடைபெற்ற நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியின் போது, அரங்கிலிருந்த ரசிகர் ஒருவரை குரங்கு ஒன்று தாக்கிய விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அரங்கில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான ரசிகர்களே வந்திருந்த நிலையில், திடீரென உள்ளே புகுந்த குரங்கு ஒன்று ரசிகர் மாடத்திற்குச் சென்றது.

அரங்கில் அமர்ந்திருந்த ஒரு ரசிகரின் தோள்பட்டையில் எதிர்பாராதவிதமாகப் பாய்ந்த அந்த குரங்கு, அவரது கழுத்தில் கடிக்க முயன்றது. அதிர்ச்சியடைந்த அந்த ரசிகர் குரங்கை விரட்ட முயன்றபோது, அது அவரது கழுத்துப் பகுதியில் லேசாகக் கடித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது. இந்த எதிர்பாராத தாக்குதலால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

   

https://twitter.com/SubhajitM24/status/2107480686617932041/video/1

   

இச்சம்பவத்தை அங்கிருந்தவர்கள் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த நிலையில், அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இலவச நுழைவுச் சீட்டுகள் அறிவிக்கப்பட்ட போதிலும், போட்டியைப் பார்க்கக் குறைந்த எண்ணிக்கையிலான ரசிகர்களே வந்திருந்த நிலையில், இந்தக் குரங்குத் தாக்குதல் வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தையும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.