உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தின் கேன்ட் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் அதிர்ச்சியூட்டும் திருட்டு முயற்சி ஒன்று நடந்துள்ளது. திருடும் நோக்கில் நான்கு திருடர்கள் ஒரு வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். அங்கு ஒரு அறையில் பெண் ஒருவர் தனது குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த திருடன் ஒருவன் தூங்கிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணுக்கு முத்தமிட்டுள்ளான்.
திருடன் முத்தமிட்டதால் அந்தப் பெண் திடீரென விழித்துப் பார்த்துள்ளார். அப்போது தங்களுக்கு முன்னால் கைகளில் துப்பாக்கி மற்றும் தடிகளுடன் நின்றிருந்த நபர்களைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். விழித்துக் கொண்ட பெண்ணை ஆயுதங்களைக் காட்டி மிரட்டிய திருடர்கள், வீட்டில் உள்ள பணம் மற்றும் நகைகள் எங்கே இருக்கிறது என்று கேட்டுள்ளனர். இந்த சலசலப்பால் வீட்டில் இருந்த ஒரு சிறுமியும் எழுந்து அழத் தொடங்கியுள்ளார்.
இதனால் பயந்துபோன குடும்பத்தினர், பின்னர் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அந்தப் பெண் சத்தம் போட்டுள்ளார். பெண்ணின் அலறல் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் விழித்துக் கொள்வார்கள் என்ற பயத்தில், திருடர்கள் அங்கிருந்து உடனடியாக தப்பியோடினர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து திருடர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
