பிரசாந்துக்கு 2-வது திருமணம் எப்போது..? அந்தகன் பட நிகழ்ச்சியில் மனம் நொந்து பதில் சொன்ன தியாகராஜன்..!!

By admin on ஆவணி 17, 2024

Spread the love

90களில் இளம் பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்தவர் பிரசாந்த். அந்த காலகட்டத்தில் விஜய், அஜித்தை விட பிரசாந்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது. டாப் ஸ்டார் என அழைக்கப்பட்ட பிரசாந்த் ஜீன்ஸ், வின்னர் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் சினிமாவில் சறுக்கல்களை சந்தித்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரசாந்த் ஹீரோவாக கம்பேக் கொடுத்துள்ளார்.

   

கடந்த 2018-ஆம் ஆண்டு ஹிந்தியில் அந்தாதூன் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகி மெகா ஹிட் ஆனது. அந்த படத்தை அந்தகன் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்துள்ளனர். இதில் பிரசாந்த் ஹீரோவாக நடித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து விட்டது. ஆனால் ஒரு சில காரணங்கள் காரணமாக படம் ரிலீஸ் ஆகாமல் தள்ளி போனது.

   

actor Prashanth

 

அந்தகன் படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். மேலும் சிம்ரன், கார்த்திக், சமுத்திரக்கனி, யோகி பாபு, வனிதா, கே.ஸ் ரவிக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த 9-ஆம் தேதி அந்தகன் படம் ரிலீஸ் ஆனது. இந்த நிலையில் அந்தகன் பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கே.எஸ் ரவிக்குமார் பிரசாந்துக்கு எப்போ கல்யாணம் பண்ண போறீங்க என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த தியாகராஜன் எனக்கு ரொம்ப மன வருத்தமான விஷயம் பிரசாந்த் ஓட திருமண வாழ்க்கை தான். தினமும் நானும் பிரசாந்தோட அம்மாவும் அத யோசிக்காத நேரமும் நாளும் இல்ல. உண்மையாகவே நல்ல குடும்பப்பாங்கான பெண்ணை தேடிட்டு தான் இருக்கோம். பட வேலையை நிறுத்திட்டு பிரசாந்துக்கு பொண்ணு தேடி கல்யாணம் பண்றது தான் என்னோட வேலை. இந்த மறுபடியும் ஞாபகப்படுத்துனதுக்கு நன்றி. கண்டிப்பா பிரசாந்துக்கு கல்யாணம் பண்ணிடுவோம் சார் என கூறியுள்ளார்.

மீண்டும் பிரசாந்தை இயக்கும் தியாகராஜன்? – News18 தமிழ்