பெரிய மனுஷன்னா இப்படி தான் இருக்கணும்… இளையராஜாவுக்கு சரியான நோஸ் கட்… தியாகராஜன் கொடுத்த தரமான பதிலடி…!!

By Soundarya on ஆனி 6, 2025

Spread the love

இசைஞானி இளையராஜா தன்னுடைய பாடல்களை வேறு படங்களில் பயன்படுத்தி இருந்தால் அதற்கு நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுத்து வருகிறார். அந்த வகையில் குட் பேட் அக்லி படத்தில் அவருடைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டதற்கு ஐந்து கோடி நஷ்ட ஈடு கேட்டு இருந்தார். ஆனால் அந்த பாடல்கள் காப்புரிமை உள்ள இடத்தில் அனுமதி வாங்கி விட்டதாக தயாரிப்பு நிறுவனம் கூறிவிட்டது. இந்த நிலையில் தான் நடிகர் பிரஷாந்தின் தந்தையான தியாகராஜன் பேசி இருக்கும் விஷயம் பலரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

   

அதாவது சமீபத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான படம் டூரிஸ்ட் பேமிலி. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. முதல் நாளிலேயே படம் நல்ல விமர்சனத்தை பெற்று சூப்பர் ஹிட் அடித்துள்ளது. படத்தில் ரசிக்கும் படியாக பல காட்சிகள் இருந்தது. ஆனாலும் மலையூரு நாட்டாமை என்ற பாடல் வரும் காட்சி வேற லெவலில் ஹிட் அடித்தது.   அதாவது அவர் இயக்கி பிரசாந்த் நடித்த மம்பட்டியான் படத்தில் தான் இந்த பாடல் இருக்கிறது. இந்த பாடலை பயன்படுத்தியதற்காக டூரிஸ்ட் ஃபேமிலி  படக்குழு தியாகராஜனிடம் பர்மிஷன் கேட்டார்களா என்று அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

   

 

அதற்கு அவர் இந்த பாடலை அவர்கள் பயன்படுத்தியது எனக்கு மகிழ்ச்சி தான். மீண்டும் பல கோடி மக்களிடம் இந்தப் பாடல் சென்றடைந்துள்ளது. படத்தின் வெற்றிக்கு இது ஒரு காரணமாக உள்ளது. நிறைய பேர் என்னிடம் உங்களிடம் அனுமதி கேட்காமல் பயன்படுத்தி விட்டார்கள். வழக்கு போடுங்கள் காசு கேளுங்கள் என்று சொன்னார்கள்.

ஆனால் அதில் எனக்கு விருப்பமில்லை. அப்படி யோசிக்கவும் மாட்டேன். நியாயப்படி பார்த்தால் நான் தான் அவர்களுக்கு காசு கொடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இது வைரலாகி வரும் நிலையில் இளையராஜாவிற்கு சரியான நோஸ் கட், பெரிய மனுஷன் இப்படி பெருந்தன்மையாக தான் இருக்க வேண்டும்” என்று பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது.