தமிழ் சினிமாவில் ஒரு பிசியான நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் பாபி சிம்ஹா. ஜிகர்தண்டா என்ற படத்தில் அசால்ட்டான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் தெலுங்கு படங்களில் வில்லனாக கலக்கி வருகிறார். இவர் முன்னணி கதாநாயகர்களுக்கு சமமான கேரக்டரில் நடித்த வருகிறார். தன்னுடைய கேரியரைப் புரட்டிப் போட்டது ‘அசால்ட் சேது’ என்ற கதாபாத்திரம் தான் என அவரே பலமுறை கூறியுள்ளார்.

ஜிகர்தண்டா படத்திற்கு தேசிய விருதும் இவருக்கு கிடைத்தது. ஜிகர்தண்டா படத்தின் மூலமாக பிரபலமான இவர் நடிகை ரேஷ்மி மேனனை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து “உறுமீன்” எனும் படத்தில் நடித்துள்ளார்கள். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் சமூக வலைதள பக்கத்தில் எப்போது ஆக்டிவாக இருந்து வரும் இவர் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளோடு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் பாதி சிம்ஹாவின் பிள்ளைகள் இவர்கள் நன்றாக வளர்ந்து விட்டார்கள் என்று ஆச்சர்யத்தோடு கூறி வருகிறார்கள்.
