நிர்வாணப்படுத்தி கை கால்களை கட்டி… நாய்களை வைத்து பாலியல் தொல்லை கொடுத்தாங்க… இஸ்ரேலில் கைதிக்கு நடந்த கொடுமை..!!!

By Soundarya on ஆனி 10, 2026

Spread the love

அல் ஜசீரா ஊடகம் வெளியிட்டுள்ள புதிய ஆவணப்படம் ஒன்று சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன கைதிகள் அங்கு எத்தகைய கொடூரமான சித்திரவதைகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் ஆளாகிறார்கள் என்பது குறித்த திடுக்கிடும் உண்மைகளை இந்த ஆவணப்படம் வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.

இஸ்ரேல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பாலஸ்தீன முன்னாள் கைதி ஒருவர், தாம் அங்கு அனுபவித்த வேதனைகளை இந்த ஆவணப்படத்தில் பகிர்ந்துள்ளார். சிறை அதிகாரிகள் தங்களை முழுமையாக நிர்வாணப்படுத்தி, கண்கள் மற்றும் கைகளைக் கட்டி வைத்து கடுமையான பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கியதாக அவர் மிக வருத்தத்துடன் குற்றம் சாட்டியுள்ளார்.

   

அனைத்திற்கும் மேலாக, சிறைச்சாலைகளின் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் பயிற்சி பெற்ற நாய்களைப் பயன்படுத்தி தங்களுக்குப் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களும் கொடுமைகளும் அளிக்கப்பட்டதாக அந்த முன்னாள் கைதி வேதனையுடன் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை தற்பொழுது சமூக ஊடகங்களிலும் சர்வதேச அளவிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.