எடப்பாடி போட்ட பிச்சையில் வாழ்ந்துட்டு.. உண்ட வீட்டிற்கே ரெண்டகம் செய்வதா..? அதிமுக தலைமை காட்டம்..!!

Spread the love

தமிழகத்தில் நடிகர் விஜய் தலைமையிலான புதிய ஆட்சி அமைந்துள்ள சூழலில், அதிமுகவிற்குள் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் தற்போது சமூக வலைதளங்களில் பகிரங்கமாக வெடித்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆதரவோடு ஆட்சியமைக்க விரும்பியதாகக் கூறப்படும் தகவல்களை சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் ஊடகங்களில் முன்வைத்த நிலையில், அதற்கு அதிமுக தலைமை கழகத்தின் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ பக்கத்தில் மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அந்தப் பதிவில், சொந்த மாவட்டத்தில் வெற்றி பெறத் துப்பில்லாதவர்கள் எல்லாம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவதாகக் காட்டமாக விமர்சிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி போட்ட பிச்சையில் வெற்றி பெற்றுவிட்டு, இன்று பதவிக்காக த.வெ.க-விடம் மண்டியிட்டுக் கிடப்பதாகவும், உண்ட வீட்டிற்கே இரண்டகம் செய்யும் ஈனத்தனமான செயலில் இவர்கள் ஈடுபடுவதாகவும் அந்தப் பதிவில் சாடப்பட்டுள்ளது. மேலும், நேற்று திமுக-வின் செந்தில் பாலாஜியுடன் இவர்கள் தனியாக என்ன பேசினார்கள்? என்பதையும் விளக்க முடியுமா எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

கழகம் யாரோடு கூட்டணி வைக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க இவர்கள் யார் என வினவியுள்ள அதிமுக தலைமை, சுமார் 1.34 கோடி வாக்குகள் இரட்டை இலைக்காகவும் எடப்பாடியாருக்காகவுமே மக்கள் அளித்தவை என்று குறிப்பிட்டுள்ளது. எடப்பாடியாரால் தான் தொண்டர்கள் மற்றும் இந்த இயக்கம் இயங்குவதாகவும், இந்த அதிகாரத் திமிரையும் பண்ணையார்தனத்தையும் தொண்டர்கள் இனியும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்றும் அதிமுக அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Swetha

Recent Posts

“இனி தமிழ்நாட்டில் 10 மணிக்கு மேல்”… விஜய் போட்ட அந்த ஒரே ஒரு கண்டிஷன்… பின்னணியில் நடந்த நள்ளிரவு அதிரடி.. காவல்துறையே ஷாக்…!

தமிழ்நாட்டின் முதல்வராகப் பொறுப்பேற்ற ஒரே வாரத்தில், மக்கள் நலன் சார்ந்த அதிரடி நடவடிக்கைகளால் ஒட்டுமொத்த மாநிலத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் முதல்வர்…

12 seconds ago

தமிழகத்தை உலுக்கும் ‘ஆபரேஷன் ப்ளூ ஜெயண்ட்’… தூக்கப்படும் திமுகவின் டாப் தலைகள்?…. விஜய் கைது செய்யும் அந்த 5 பெரிய மீன்கள் யார்…?

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அரசியல் திருப்பம் அரங்கேற உள்ளதாகத் தலைநகர அரசியல் வட்டாரங்களில் இருந்து…

4 minutes ago

இனி ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது!.. டிடிஇ-க்களுக்கு வந்தாச்சு ‘தேர்ட் ஐ’… இந்திய ரயில்வேயின் மாஸ் டிஜிட்டல் பிளான்…!!

இந்திய ரயில்வே பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும், டிக்கெட் பரிசோதனை முறையை நவீனமாக்கவும் டிடிஇ (TTE) எனப்படும் பயணச்சீட்டு பரிசோதகர்களுக்கு உடலில்…

9 minutes ago

கடவுளே இதுக்கு ஏன் எக்ஸாம் வைக்கணும்… ஆசிரியர்களே சொல்லிக்கொடுத்த வினாத்தாள்.. லட்சங்களை கொட்டிய பெற்றோர்கள்.. நீட் கசிவின் பகீர் பின்னணி…!!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், தேர்வு எழுதுவதற்கு சில நாட்களுக்கு முன்பே மாணவர்களுக்கு வினாக்கள் மற்றும் விடைகள் ரகசியமாகத்…

9 minutes ago

அதிமுகவில் நள்ளிரவு அதிரடி… எடப்பாடி போட்ட ஒற்றைக் கையெழுத்து… அடுத்தடுத்து தூக்கப்பட்ட விக்கெட்டுகள்… தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு…!

அதிமுகவில் உட்கட்சிப் பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுத்தடுத்து எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள்…

9 minutes ago

நள்ளிரவில் CM விஜய் போட்ட ஒற்றை உத்தரவு… களமிறங்கிய போலீஸ் படை… ஒரே இரவில் மொத்தமாக அலறிய சென்னை…!

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்கும் பொருட்டு, நள்ளிரவில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.…

17 minutes ago