சென்னை பூந்தமல்லியில் கணவரின் கொடுமை தாங்காமல் சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஷாலினி 33 தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு 5 வயதில் ஒரு குழந்தை உள்ள நிலையில், குழந்தையை அடித்ததாகக் கூறி கணவர் செல்வின் அவரைத் தாக்கியுள்ளார். இதனால் மனமுடைந்த ஷாலினி, “அம்மா வலிக்குது.. நான் போறேன்.. என்னைச் சாகடிக்கவே அவன் கொடுமைப்படுத்துகிறான்” என்று கதறிழுது உறவினர்களுக்கு அனுப்பிய கடைசி செல்போன் வீடியோ தற்போது வெளியாகி அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஷாலினியின் உறவினர்கள் அளித்த புகாரின்பேரில் பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவர் செல்வினை உடனடியாகக் கைது செய்தனர். மேலும், இது குடும்ப வன்முறையா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற மன அழுத்தங்கள் மற்றும் தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபட தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 எண்ணைத்தொடர்புகொண்டு உரிய ஆலோசனைகளைப் பெறலாம்.
மத்திய பிரதேச மாநில நர்சிங் கவுன்சிலின் இணையவழி பதிவு முறையில் நிலவும் பாதுகாப்பின்மையை அம்பலப்படுத்தும் விதமாக, என்எஸ்யுஐ மாணவர் அமைப்பின்…
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்தபோது…
தவெக - பாமக கூட்டணி குறித்த தகவல்கள் வதந்தியே என்றும், விசிகவின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலரே இத்தகைய…
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல்…
திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான, அரசு மருத்துவமனை அருகே அமைந்துள்ள சுமார் 7,515 சதுர அடி பரப்பளவிலான…
மதுராந்தகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய்யையும் அவரது ஆட்சியையும்…