“என்ன கொடுமை சார் இது?”…. கழுதைக்கு நர்ஸ் வேலைக்கான ஆர்டர் கொடுத்த  அரசு…. மத்திய பிரதேசத்தில் வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி உண்மை….!

Spread the love

மத்திய பிரதேச மாநில நர்சிங் கவுன்சிலின் இணையவழி பதிவு முறையில் நிலவும் பாதுகாப்பின்மையை அம்பலப்படுத்தும் விதமாக, என்எஸ்யுஐ மாணவர் அமைப்பின் மாநில துணைத் தலைவர் ரவி பார்மர் மேற்கொண்ட விசித்திரமான சோதனை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கவுன்சில் இணையதளத்தில் விண்ணப்பித்த அவர், விண்ணப்பதாரர் பெயரில் ‘கழுதை’ என்றும், பெற்றோர் பெயரில் ‘கழுதை தந்தை’, சாதியில் ‘விலங்கு’ மற்றும் புகைப்படத்திற்கு ஒரு நிஜ கழுதையின் படத்தையும் பதிவேற்றினார். மேலும், தேவையான சான்றிதழ்களுக்கு பதிலாக வெற்று தாள்களையே இணைத்திருந்தார்.

ஆனால், எவ்வித ஆவணச் சரிபார்ப்போ அல்லது அடிப்படை கள ஆய்வோ இன்றி, விண்ணப்பித்த வெறும் 5 நிமிடங்களிலேயே ‘கழுதை’யின் பெயரில் பதிவு செய்யப்பட்ட செவிலியர் மற்றும் மகப்பேறு உதவியாளருக்கான தற்காலிக டிஜிட்டல் சான்றிதழ் வழங்கப்பட்டது. 2031-ஆம் ஆண்டு வரை செல்லுபடியாகும் வகையில், போபால் நர்சிங் கல்லூரியில் பி.எஸ்சி நர்சிங் முடித்ததாக அச்சான்றிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது, ஆன்லைன் அமைப்பின் தீவிர குறைபாட்டை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. இந்த போலி சான்றிதழின் நகல் சமூக வலைதளங்களில் வெளியாகி, பொதுமக்கள் மற்றும் மருத்துவ சமூகத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் குறித்த சர்ச்சை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, இடைத்தரகர்களின் தலையீட்டைத் தவிர்க்கவே தானியங்கி சான்றிதழ் வழங்கும் முறை கொண்டுவரப்பட்டதாகவும், இது வெறும் தற்காலிகப் பதிவு மட்டுமே என்றும் அதிகாரிகள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மனித உயிர்களோடு நேரடியாகத் தொடர்புடைய மருத்துவத் துறையில், முறையான மனித ஆய்வோ தரவுச் சரிபார்ப்போ இன்றி இவ்வாறு தானியங்கி முறையில் சான்றிதழ்கள் வழங்கப்படுவது பெரும் ஆபத்தானது என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இத்தகைய தொழில்நுட்ப குளறுபடிகளை உடனடியாகக் களைந்து, போலிப் பதிவுகளைத் தடுக்கும் வகையில் இணையதள அமைப்பை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Nanthini

Recent Posts

“இனி தப்பவே முடியாது”…. அரிவாள் வெட்டு ரவுடி, புதுச்சேரி சாராய அழகி… மயிலாடுதுறை எஸ்பி தூக்கிய ‘குண்டாஸ்’ சாட்டை…!

மயிலாடுதுறை மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் அமைதியான வாழ்க்கையை உறுதி செய்யவும் மாவட்ட காவல்துறை சார்பில் தீவிர நடவடிக்கைகள்…

20 minutes ago

“ப்ளீஸ் வேண்டாம்…. என்னை வாழ விடுங்க”…. நடுரோட்டில் துடிதுடித்த 2 குழந்தைகளின் தாய்…. தாலி கட்டிய பொண்டாட்டிணு கூட பார்க்காமல்.. அண்ணனும், கணவரும் மாறி மாறி…..!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூரைச் சேர்ந்தவர் பூமிராஜா (39). இவருக்குச் செல்வராணி (35) என்ற மனைவியும் இரு…

30 minutes ago

“2017-க்கு அப்புறம் எல்லாமே போச்சு… சீக்கிரமே எடப்பாடி தனிமரம் ஆவாரு”…. சாபம் விட்ட EX அமைச்சர் செம்மலை…. பரபரப்பு….!

அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செம்மலை, அக்கட்சியிலிருந்து விலகி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருப்பது தமிழக…

41 minutes ago

“கேப்டன் ஆன்மா பத்தி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு?”…. இதோட நிறுத்துங்க…. ஆதவ் அர்ஜுனாவை வெளுத்து வாங்கிய பிரேமலதா….!

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்தபோது…

1 மணத்தியாலம் ago

விஜய் கூட்டணியில் சௌமியா அன்புமணி?… குண்டை தூக்கி போட்ட திருமாவளவன்…. கடைசி நேரத்தில் வெளியான பகீர் உண்மை….!

தவெக - பாமக கூட்டணி குறித்த தகவல்கள் வதந்தியே என்றும், விசிகவின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலரே இத்தகைய…

1 மணத்தியாலம் ago

“இடைத்தேர்தல் களத்தில் தீப்பொறி”…. விஜய் கூட்டணி இறக்கிய மாஸ் பிரசாரம், ஸ்தம்பித்த ஹைவேஸ்….. அதிரும் தமிழகம்…!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல்…

1 மணத்தியாலம் ago