ஒரே குடும்பத்தில் 4 சூப்பர் ஸ்டார்.. 5000 கோடிக்கும் மேல் சொத்து மதிப்பு.. இந்தியாவில் பணக்கார சினிமா குடும்பம் பற்றி தெரியுமா..?

By Ranjith Kumar

Updated on:

உலகம் முழுவதும் மருத்துவத்துறையில் இருந்து ஹோட்டல் வரைக்கும் குடும்ப அரசியல் இல்லாத ஆதிக்கம் கொண்ட குடும்பம் எங்கும் கிடையாது, அந்தவகையில், சினிமாவும் இதற்கு விதிவிலக்கல்ல. நடிகர்கள் முதல் தயாரிப்பாளர்களை வரை தங்களது வாரிசுகளை சினிமா துறையில் களம் இறக்கி சினிமா குடும்பங்களாக மாறி வருகின்றன.
இந்தியா முழுவதுமாக ஒவ்வொரு மொழி திரைப்படத்துறையிலும் சினிமா குடும்பங்கள் உள்ளன.

இந்தியாவில் மொத்தம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி மராட்டி என்று பழமொழிகள் திரையுலகங்கள் இருக்கிறது ஆதிக்கமும் சரி பணக்கார சினிமா குடும்பங்களும் சரி குடும்ப அரசியல் மூலம் ஆதிக்கம் செலுத்தி தான் வருகிறார்கள் இதில் பார்க்கப் போனால் இந்த குடும்பம் தான் அதிகமாக சம்பாதிக்கும் சினிமா குடும்பம் என்று தகவல் வெளியாகியுள்ளது, இந்த சினிமா குடும்பங்களில் மிகவும் பணக்கார திரைப்பட குடும்பம் தெலுங்கு சினிமாவை சேர்ந்தது. அது வேறு யாருமில்லை தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் குடும்ப உறுப்பினர்கள்தான். அல்லு-கொனிடேலா குடும்பம்தான் நாட்டின் பணக்கார சினிமா குடும்பம்.

   

தெலுங்கு சினிமா துறையில் மெகா குடும்பம் என்ற அழைக்கப்படும் அல்லு- கொனிடேலா குடும்பத்தின் ஆதிக்கம் அதிகம். இந்த மெகா குடும்பம் இந்தியாவின் மிக முக்கியமான திரைப்பட குடும்பங்களில் ஒன்றாகும், தெலுங்கு சினிமாவின் பிரபலமான நடிகர், நகைச்சுவை நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டவரான அல்லு ராமலிங்கய்யாவால் 1950ல் மெகா குடும்பம் உருவானது.

இந்த கூட்டு குடும்பத்தின் மொத்த கணக்கில் சிரஞ்சீவி, ராம் சரண், அல்லு அரவிந்த் மற்றும் அல்லு அர்ஜூன் ஆகியோரின் பங்களிப்பு பெரியது. மெகா குடும்பத்தின், இவர்கள் சினிமா மட்டுமின்றி பலத்துறையிலும் பிசினஸ் செய்து வருகிறார்கள், குடும்பத்தில் ஒவ்வொருவரும் தனித்தனியாக சினிமாத்துறை போன்ற பல வெவ்வேறு துறைகளில் பணங்களை சம்பாதித்து வருகிறார்கள் அதன் அடிப்படையில், இவர்களின் சொத்து மதிப்பை மொத்தமாக பார்த்தால் சொத்து மதிப்பு ரூ.6,000 கோடியாக உள்ளது.

author avatar
Ranjith Kumar