ஆலியா மானசா “ராஜா ராணி” சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரை உலகில் மிகப் பிரபலமானவர். ராஜா ராணி சீரியல் மூலம் தான் சஞ்சீவி அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது “ஆலியா மானசா” தனியார் சேனலில் எம்.எல்.எம் கம்பெனிக்கு ப்ரொமோஷன் ஆக இணையதளத்தில் தான் எப்படி இவ்வளவு சீக்கிரமாக பணம் சம்பாதித்தேன் என்றும், வீடு கார் போன்றவற்றை இதன் மூலமாகத்தான் எளிதில் சம்பாதித்து வாங்கினேன் என்றும் அதை நீங்கள் செய்தாலும் மிகப் பெரிய பணக்காரராக ஆகலாம் என்று, 26,000 கட்டினால் போதும் சில வினாடிகளில் லட்சங்களை அல்லலாம்,
நான் நினைத்தால் உங்களை லட்சாதிபதி ஆக்குவேன் என்று விளம்பரம் ஒன்று இணையத்தில் பரவி வந்தது. இதை வைத்து எம்.எல்.எம் கம்பெனி எங்களுடைய கம்பெனியில் சேருங்கள். உங்களை லட்சாதிபதி ஆக்குவேன் என்று ஆலியா மானசாவை வைத்து மார்க்கெட்டிங் செய்துவந்துள்ளார்கள். இதனைத் தொடர்ந்து சில நபர்கள் “ஆலியா மானசாவை” தொடர்பு கொண்டு இது உண்மையா என்று கேட்டபோது,
அந்த தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய வீடியோவில் நான் இதுபோன்று எந்த எம்.எல்.எம் கம்பெனிக்கும் ப்ரோமோஷன் செய்யவில்லை, நான் கடனில் தான் வீடும், காரும் வாங்கினேன். நான் சீரியலில் நடித்து வரும் பணத்தை வைத்து தான் அந்த கடனை அடைத்து வருகிறேன் என்று தெரிவித்திருந்தார். இணையத்தில் பரவி வரும் அந்த வீடியோ முற்றிலும் போலியானது அதை நீங்கள் நம்பாதீர்கள் என்று தெரிவித்து இருந்திருக்கார்.
“ஆலியா மனச” பெயரில் ஒரு ஆப் கிரியேட் செய்து ஆப் லிங்கை கிளிக் செய்து உள்ளே போனால், அந்த தனியார் நிகழ்ச்சியில் ஆலியா மானசா பேசாததெல்லாம் பேசியது போல் உருவாக்கி போலியாக தகவலை பதிவிட்டுள்ளனர். போலியான தகவல்களை பரப்பி மக்களை மோசடி செய்து வருகிறார்கள் என்று கண்டறிந்தார். இதனைத் தொடர்ந்து ஆலியா மானசா புகார் ஒன்று அளித்துள்ளார், அதில் இது முழுக்க முழுக்க பொய்யான தகவல் யாரும் நம்பாதீர்கள் இதில் இணைந்து யாரும் பணத்தை ஏமாந்து விடாதீர்கள் என்று தன் தரப்பிலிருந்து தெரிவித்துள்ளார்.
