தியாகராஜன் தமிழ் சினிமாவில் பணியாற்றிய நடிகர், திரைப்பட இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார் தியாகராஜன். இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த பிரசாந்த் அவர்களின் தந்தை ஆவார். மேலும் நடிகரும் இயக்குனரான பேக்கடி சிவராமின் மருமகனும் தமிழ் நடிகர் விக்ரமின் தாய் மாமாவும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடிப்படையில் தொழிலதிபரான தியாகராஜன் 1981 ஆம் ஆண்டு அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் நடித்த ராதாவின் சகோதரராக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அடுத்ததாக 1982 ஆம் ஆண்டு மலையூர் மம்பட்டியான் என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்த திரைப்படம் அவருக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
அதற்கு பிறகு பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவரின் மூலமாகவே நடிகர் பிரசாந்த் தமிழ் சினிமாவில் நுழைந்தார். பள்ளி தேர்வை முடித்துவிட்டு விடுமுறையில் இருக்கும் போது 1990 ஆம் ஆண்டு வைகாசி பொறந்தாச்சு என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.
முதல் படமே மெகா ஹிட் படமானது. அதற்குப் பிறகு பல வெற்றி திரைப்படங்களில் நடித்த நடிகர் பிரசாந்த் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வந்தார். விஜய் அஜித்துக்கும் மேலாக போற்றப்பட்டவர் நடிகர் பிரசாந்த். இவர் தமிழ் சினிமாவில் எங்கேயோ போய்விடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்து இருந்த வேளையில் 2000 களில் சரிவர கதைகள் அமையாததால் தமிழ் சினிமாவை விட்டு விலகிவிட்டார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த வருடம் அந்தகன் திரைப்படத்திலும் கோட் திரைப்படத்திலும் நடித்து கம்பேக் கொடுத்திருக்கிறார் நடிகர் பிரசாந்த்.
ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட நடிகர் பிரசாந்த் அவர்களின் தந்தை நடிகர் தியாகராஜன் பிரசாந்த் நடிக்க வேண்டிய ஆனால் தவறவிட்ட படங்களை பற்றி கூறியிருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் அஜித் நடித்த தீனா திரைப்படம் பிரசாந்த் நடிக்க வேண்டியது. கதையெல்லாம் ஓகே பண்ணிட்டோம். இயக்குனர் ஏஆர் முருகதாஸ் கிட்ட பிரசாந்த் ரொம்ப பிசியா டே நைட்டு வேற படத்துல ஷூட்டிங்ல இருக்காரு .ஒரு பத்து நாள் டைம் குடுங்கனு நான் கேட்டேன். அதுக்குள்ள அவர் அவசரத்துல அஜித்த வச்சு எடுத்துட்டாரு. அடுத்ததாக கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்துல அஜித் ரோல்ல பிரசாந்த் நடிக்கிறதா இருந்தது. ஆனா அந்த படத்துல அஜித்துக்கு ஜோடியா தபுவ பிக்ஸ் பண்ணி இருந்தாங்க. பிரசாந்த் கூட கம்பேர் பண்ணும் போது தபு வந்து கொஞ்சம் வயசு அதிகமா தெரிஞ்சது. அப்பதான் ஜீன்ஸ் வந்து பிரசாந்த் வந்து பிரபலம் ஆகிக்கொண்டு இருந்த நேரம்.

அதனால நான் வந்து பிரசாந்த் ஐஸ்வர்யாவை மறுபடியும் சேர்த்து வச்சிருங்க அப்படின்னு சொன்னேன். அது இயக்குனருக்கு ஒத்து வரல. அதனால அந்த படமும் போயிருச்சு. அதற்கு அடுத்ததாக தானா சேர்ந்த கூட்டம் திரைப்படமும் பிரசாந்த் பண்ண வேண்டியதுதான். ஆனால் நான் ஒரு ப்ரொடக்ஷன்ல பேசி இருந்தேன் அதுக்குள்ள இயக்குனர் வேற இடத்துல புரொடக்ஷன் பேசி எல்லாம் ஓகே பண்ணி சூர்யா அதுல நடிச்சிருப்பாறு அதுவும் கையை விட்டு போயிடுச்சு என்று மனம் திறந்து கூறியிருக்கிறார் தியாகராஜன்.
