பிரபல இயக்குனரான வெங்கட் பிரபு மங்காத்தா, பிரியாணி, மாநாடு உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். முதன் முதலில் சென்னை 600028 திரைப்படத்தின் மூலமாக தான் இயக்குனராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இந்த நிலையில் கடந்த 2007-ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 600028 படம் ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் ஒரு வித்தியாசமான கதை களத்தோடு நகர்ந்து இருக்கும்.
கிரிக்கெட் விளையாடும் வாலிபர்களை பற்றி அந்த படம் எடுத்து கூறுகிறது. நகைச்சுவை கலந்த கிரிக்கெட், காதல் சண்டை என அனைத்துமே அந்த படத்தில் இருக்கும். கடந்த 2016-ஆம் ஆண்டு சென்னை 600028 படத்தின் இரண்டாவது பாகம் ரிலீஸ் ஆனது. கடைசியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கோட் திரைப்படம் ரிலீஸ் ஆனது. அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளதாக கூறப்பட்டது.
மறுபுறம் சென்னை 600028 படத்தின் மூன்றாவது பாகத்தையும் வெங்கட் பிரபு ரெடி செய்து வருவதாக சினிமா வட்டாரத்தில் பேச்சுகள் அடிபட்டது. ஆனால் ஒரு தரப்பினர் அந்த படம் வராது என கூறுகின்றனர். ஏனென்றால் வெங்கட் பிரபுவுக்கு வாய்ப்பு கொடுத்து அவரை வளர்த்து விட்டவர் தயாரிப்பாளர் சரண். இவர் வெங்கட் பிரபுவின் நெருங்கிய நண்பர் ஆவார். சென்னை 600028 படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்கும்போதே வெங்கட் பிரபு அந்த தலைப்பை பயன்படுத்தியதற்காக 50 லட்சம் பணத்தை கொடுப்பதாக கூறியுள்ளார்.
ஆனால் இன்று வரை அந்த படத்தை கொடுக்க வில்லையாம். அது மட்டும் இல்லாமல் கோட் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட வெங்கட் பிரபு பல விஷயங்கள் பற்றி பேசினார். ஆனால் தன்னை வளர்த்து விட்ட தயாரிப்பாளரும், தனது நெருங்கிய நண்பருமான சரணை பற்றி எதுவே எதுவுமே கூறவில்லை. இதனால் சென்னை 600028 படத்தின் மூன்றாவது பாகம் வருவது சந்தேகம்தான் என சினிமா வட்டாரத்தில் பேச்சுகள் அடிபடுகிறது.