நாம் ஒவ்வொரு நாளும் பூஜை புனஸ்காரங்கள் செய்வது வேண்டுவது மந்திரங்களை ஜெபிப்பது யாகங்கள் நடத்துவது எல்லாம் தெய்வங்களின் அனுக்கிரகம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான். தெய்வமே வீட்டிற்குள் வர வேண்டும் என்று விருப்பம் யாருக்கு தான் இருக்காது. ஒரு வீட்டில் தெய்வம் குடியேறிவிட்டால் அந்த வீட்டில் பணக்கஷ்டமோ மன கஷ்டமோ இருக்காது. சகல சௌபாக்கியமும் ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். அப்படி நம் வீட்டில் தெய்வம் நடமாட்டம் இருக்கிறதா இல்லையா என்பதை சில அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளலாம். அவை என்ன என்பதை பற்றி இனி காண்போம்.

பொதுவாக தெய்வங்களும் தேவதைகளும் நம்மை சுற்றியே இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. நாம் பேசும் வார்த்தைகளில் ததாஸ்து என்று அவர்கள் கூறுவார்களாம். சில நேரம் நாம் சொல்வது அப்படியே அதனால் தான் பலிக்கிறது. இதனால் தான் வீட்டில் கெட்ட வார்த்தைகளையோ அபசகுனமான சொற்களையோ சொல்லக்கூடாது என்று சொல்கிறார்கள். தெய்வ சக்திகள் நம்மை சுற்றி இருந்தாலும் பல சமயங்களில் அதை நம்மளால் உணர முடியாது. சில சமயங்களில் நம்மால் அதை உணர முடியும்.
தீய சக்திகளும் தெய்வ சக்திகளும் இரண்டுமே நம்மை சுற்றி தான் இருக்கிறது. இந்த இரண்டிற்கும் வேறு வேறு அறிகுறிகள் இருக்கும். இரண்டையும் முதலில் குழப்பிக் கொள்ளக் கூடாது. தெய்வ சக்தி உங்கள் வீட்டில் இருக்கிறது என்றால் உங்கள் வீட்டில் பல்லி சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். வீட்டு நிலை வாசல் பூஜை அறை போன்ற இடங்களில் அதிகமாக பல்லியின் சத்தம் கேட்டால் உங்கள் வீட்டில் தெய்வம் நடமாட்டம் இருக்கிறது என்பதாகும்.
அதேபோல் உங்கள் வீட்டில் முன்னால் அடிக்கடி காகம் சத்தமிட்டு கொண்டே இருந்தால் வீட்டில் தெய்வ சக்தி உள்ளது என்பது என்று அர்த்தம். சில குறிப்புகளை முன்கூட்டியே அறியும் திறன் காகத்திற்கு உண்டு. விருந்தினர் வருகை, தெய்வ சக்திகள் நடமாட்டம், இறந்தவர்களின் ஆத்மா குறிப்பிட்ட காலம் வரை உங்கள் வீட்டை சுற்றி வருவது என்றால் உங்கள் வீட்டிற்கு முன்னால் நின்று காகம் நீங்கள் விரட்டினாலும் கூட அந்த இடத்தை விட்டு செல்லாமல் கத்திகொண்டே இருக்கும்.
மேலும் நம் வீட்டில் பூஜை ஏதும் செய்யாமலே சாம்பிராணி எதுவும் காட்டாமலே சில சமயங்களில் சாம்பிராணி மணம் மல்லிகை பூ சந்தன வாசம் பன்னீர் வாசம் போன்றவைகள் வரும். இப்படி இருந்தால் அந்த வீட்டில் தெய்வீக சக்தி இருக்கிறது என்பது நிச்சயமான உண்மை. சிலர் மல்லிகை பூ வாசம் வந்தால் பேய் நடமாட்டம் என்று பயப்படுவார்கள் அப்படி கிடையாது. தீய சக்திகளின் நடமாட்டம் வீட்டிலிருந்தால் நறுமணமே வராது துர்நாற்றம் ஒன்றே வரும்.

வீட்டில் சில இடங்களுக்கு சென்றால் திடீரென ஒரு குளுமையை உணர்வது அருகில் யாரோ இருப்பது போன்றது உணர்வு யாரோ தொடுவது போன்ற ஸ்பரிசமாகியவற்றை தெய்வ சக்திகள் நடமாட்டம் இருந்தால் மட்டுமே உணர முடியும். தீய சக்திகள் நம்மளை கடந்தால் அது தாக்குவது போன்று இருக்கும். வீட்டில் தீபம் ஏற்றி வைக்கும் சுடர் பெரிதாக விட்டு இருந்தால் உங்கள் வீட்டில் தெய்வ சக்தி உள்ளது என்று அர்த்தம்.
