தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவான விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து முடித்தார். பல சிக்கல்களை தாண்டி படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்தது. விரைவில் விடாமுயற்சி படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
இப்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ரிலீசான மார்க் ஆண்டனி திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது.
அடுத்த ஆண்டு பொங்கலுக்கு அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் அஜித்துக்கு பைக், கார்கள் மீது அதீத பிரியம் உண்டு. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் அஜித் பைக்கை எடுத்துக் கொண்டு சுற்றுலா சென்று விடுவார்.
இந்த நிலையில் அஜித் Porsche GT3RS சொகுசு காரை வாங்கி உள்ளார். அதன் விலை 3.5 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. அஜித் வாங்கி சொகுசு காரின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனைப் பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவிக்கின்றனர்.
