Categories: சினிமா

LYCA- ஷங்கர் மோதல்… Game Changer படத்துக்கு ஆப்பு ரெடி…

Spread the love

ங்கர் தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான இயக்குனர் ஆவார். ஆரம்பத்தில் இவர் நடிகர் விஜயின் தந்தையும் இயக்குனரும் தயாரிப்பாளரான எஸ் சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். இயக்குனர் மட்டுமல்லாமல் எஸ் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் ங்கர்.

1993 ஆம் ஆண்டு “ஜென்டில்மேன்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் ங்கர். முதல் திரைப்படமே அவருக்கு வெற்றி படமாக அமைந்தது. தொடர்ந்து காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன் என தொடர்ந்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்ததன் மூலம் பிரபலமானார் ங்கர்.

2000 காலகட்டத்திற்கு பிறகு அந்நியன், சிவாஜி தி பாஸ், எந்திரன், நண்பன், ஐ, எந்திரன் 2.0 போன்ற படங்களை இயக்கி புகழ்பெற்றார் ஷங்கர். சமீபத்தில் இவர் இயக்கிய “இந்தியன் 2” திரைப்படம் சரியாக பேசப்படவில்லை. அடுத்ததாக தெலுங்கில் ராம்சரணை வைத்து Game Changer திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கிறார் ஷங்கர். இந்த திரைப்படம் பல்வேறு மொழிகளில் விரைவில் வெளியாக இருக்கிறது. அதைத் தொடர்ந்து “இந்தியன் 3” திரைப்படத்தையும் ரிலீஸ் செய்ய இருக்கிறார் ங்கர்.

இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் தயாரிப்பு நிறுவனம் LYCA மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகும். அதுமட்டுமில்லாமல் Game Changer திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிடப் போவதும் LYCA தான். தற்போது ஷங்கர் இந்தியன் 3 படத்திற்கான பேட்ச் ஒர்க் ஷுட்டிங் செய்வதற்கு 80 கோடி பட்ஜெட் கூறியிருக்கிறார். அதில் 30 கோடி இவரது சம்பளமாம்.

ஆனால் LYCA நிறுவனம் ஏற்கனவே இந்தியன் 2 தோல்வி அடைந்ததால் மிகவும் நஷ்டமாகிவிட்டது அதனால் உங்களுக்கு சம்பளம் தர முடியாது மற்ற ப்ரொடக்ஷன் செலவை நாங்கள் தந்து விடுகிறோம் என்று கூறியிருக்கிறார்கள். இதனால் ஷங்கருக்கும் LYCAவுக்கும் இடையே மோதல் சென்று கொண்டிருக்கிறது. இதை மனதில் வைத்திருந்த LYCA கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்வதற்கு ரெட் கார்டு போட்டிருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

admin

Recent Posts

பொங்கலுக்கு பளபளப்பான வெல்லம் வாங்குறீங்களா…? அப்போ இது உங்களுக்குத்தான்….! கலப்படத்தை கண்டறிய சூப்பர் டிப்ஸ் இதோ…!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சந்தைகளில் விற்பனை செய்யப்படும் வெல்லத்தில், லாபத்திற்காகச் சுண்ணாம்பு, செயற்கை நிறங்கள் மற்றும் சோள மாவு போன்ற…

15 minutes ago

தினமும் 12 ரூபாய் போதும்.. வயசான காலத்தில் ராஜா மாதிரி வாழலாம்…!! போஸ்ட் ஆபிஸின் சூப்பர் திட்டம்…!!

குறைந்த முதலீட்டில் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள ‘அடல் ஓய்வூதியத் திட்டம்’ தற்போது அனைத்து அஞ்சலகங்களிலும்…

20 minutes ago

வாகன ஓட்டிகளுக்கு ஹேப்பி நியூஸ்…! FASTag-ல் பிப்ரவரி 1 முதல் மாறப்போகும் விதி…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!

தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் விரைவாகச் செல்வதற்காகப் பயன்படுத்தப்படும் ஃபாஸ்டேக் (FASTag) நடைமுறையில், வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் முக்கியத்…

25 minutes ago

திருப்பி தரலனா போராட்டம் தான்…!! பிடிவாதம் பிடிக்கும் அரசு ஊழியர்கள்…. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பறந்த கடிதம்…!!

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட காலக் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, மீண்டும் போராட்டக்…

34 minutes ago

2026-ல் குரு பகவானின் மும்முறை ஆட்டம்…. இந்த ராசிக்கு அடிக்கப்போகும் மெகா ஜாக்பாட்….! உச்ச குருவால் மாறப்போகும் தலையெழுத்து…!!

2026-ஆம் ஆண்டில் குரு பகவான் மிதுனம், கடகம், மற்றும் சிம்மம் என மூன்று ராசிகளுக்குத் தனது இருப்பிடத்தை அதிரடியாக மாற்ற…

41 minutes ago

அமித்ஷா போட்ட ஆர்டர்… ஆடிப்போன எடப்பாடி… மீண்டும் கூட்டணியில் இணையும் முக்கிய புள்ளிகள்… பரபரப்பில் தமிழக அரசியல் களம்…!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் தமிழக அரசியல் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது.…

55 minutes ago