gc

LYCA- ஷங்கர் மோதல்… Game Changer படத்துக்கு ஆப்பு ரெடி…

By Meena on டிசம்பர் 28, 2024

Spread the love

ங்கர் தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான இயக்குனர் ஆவார். ஆரம்பத்தில் இவர் நடிகர் விஜயின் தந்தையும் இயக்குனரும் தயாரிப்பாளரான எஸ் சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். இயக்குனர் மட்டுமல்லாமல் எஸ் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் ங்கர்.

   

1993 ஆம் ஆண்டு “ஜென்டில்மேன்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் ங்கர். முதல் திரைப்படமே அவருக்கு வெற்றி படமாக அமைந்தது. தொடர்ந்து காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன் என தொடர்ந்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்ததன் மூலம் பிரபலமானார் ங்கர்.

   

2000 காலகட்டத்திற்கு பிறகு அந்நியன், சிவாஜி தி பாஸ், எந்திரன், நண்பன், ஐ, எந்திரன் 2.0 போன்ற படங்களை இயக்கி புகழ்பெற்றார் ஷங்கர். சமீபத்தில் இவர் இயக்கிய “இந்தியன் 2” திரைப்படம் சரியாக பேசப்படவில்லை. அடுத்ததாக தெலுங்கில் ராம்சரணை வைத்து Game Changer திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கிறார் ஷங்கர். இந்த திரைப்படம் பல்வேறு மொழிகளில் விரைவில் வெளியாக இருக்கிறது. அதைத் தொடர்ந்து “இந்தியன் 3” திரைப்படத்தையும் ரிலீஸ் செய்ய இருக்கிறார் ங்கர்.

 

இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் தயாரிப்பு நிறுவனம் LYCA மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகும். அதுமட்டுமில்லாமல் Game Changer திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிடப் போவதும் LYCA தான். தற்போது ஷங்கர் இந்தியன் 3 படத்திற்கான பேட்ச் ஒர்க் ஷுட்டிங் செய்வதற்கு 80 கோடி பட்ஜெட் கூறியிருக்கிறார். அதில் 30 கோடி இவரது சம்பளமாம்.

ஆனால் LYCA நிறுவனம் ஏற்கனவே இந்தியன் 2 தோல்வி அடைந்ததால் மிகவும் நஷ்டமாகிவிட்டது அதனால் உங்களுக்கு சம்பளம் தர முடியாது மற்ற ப்ரொடக்ஷன் செலவை நாங்கள் தந்து விடுகிறோம் என்று கூறியிருக்கிறார்கள். இதனால் ஷங்கருக்கும் LYCAவுக்கும் இடையே மோதல் சென்று கொண்டிருக்கிறது. இதை மனதில் வைத்திருந்த LYCA கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்வதற்கு ரெட் கார்டு போட்டிருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.