தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள க.விலக்கு பேருந்து நிலையத்தில், பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் மீது கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த அஜித்குமார் (28) என்ற இளைஞர், தேனியிலிருந்து காரை அதிவேகமாக ஓட்டி வந்தபோது, எதிர்பாராதவிதமாக வாகனம் அவர் கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படுகிறது.
கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், சாலையில் இருந்த சென்டர் மீடியன் மீது மோதி நிலைதடுமாறி, பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பயணிகள் மீது மின்னல் வேகத்தில் பாய்ந்தது. இந்த கோர விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி கண்டமனூர் வேலாயுதபுரத்தைச் சேர்ந்த பால்ராஜ் (75), தங்கப்பாண்டியின் மனைவி செல்வம் (50) மற்றும் ஏரதிமக்காள்பட்டியைச் சேர்ந்த மாரியம்மாள் (60) ஆகிய மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த பாக்கியலட்சுமி (39) என்பவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். காரை அஜாக்கிரதையாகவும் அதிவேகமாகவும் ஓட்டி உயிரிழப்புகளை ஏற்படுத்தியதாக கேரள இளைஞர் அஜித்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர விபத்து ஆண்டிப்பட்டி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொது இடங்களிலும் பேருந்து நிறுத்தங்களிலும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும், வாகன ஓட்டிகள் கவனமுடன் செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் இந்தச் சம்பவம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அப்பகுதி மக்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…
பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…
நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…
சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…
பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…
ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…