ஹரியானா மாநிலம் சோனிபட்டிலுள்ள இந்தியா போஸ்ட் தபால் நிலையத்தில், வாடிக்கையாளர் ஒருவருக்கு அனுப்பப்பட்ட சுமார் 8 கிலோ எடையுள்ள பார்சலில் இருந்து முந்திரிப் பருப்புகள் திருடப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பார்சல் முழுவதும் கிழிக்கப்பட்டுச் சேதமடைந்த நிலையில் வந்து சேர்ந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர், இதுகுறித்து ஊழியர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆனால், தபால் நிலைய ஊழியர்கள் எந்தவிதப் பொறுப்புணர்ச்சியும் இன்றி மிகவும் அலட்சியமாகப் பதிலளித்ததோடு, புகார் தெரிவிப்பதற்குத் தபால் நிலையத்தில் ‘புகார்ப் புத்தகமும் இல்லை எனக் கூறியுள்ளனர். அரசுத் தபால் துறையின் இத்தகைய அலட்சியப்போக்கும், ஊழியர்களின் பொறுப்பற்ற அணுகுமுறையும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையவாசிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
